ஹிட்மேன் ரோஹித்தின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கிங் கோலி – விவரம் இதோ

Kohli and Rohit
- Advertisement -

கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 23 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் 24-வது லீக் போட்டியானது இன்று ஏப்ரல் 10-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஆர்.சி.பி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோத இருக்கின்றன.

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி :

இந்நிலையில் இந்த போட்டியில் ஆர்சிபி அணி சார்பாக விளையாட இருக்கும் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான விராட் கோலி மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலி படைக்கப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் முதலிடத்தில் இருக்கிறார். கெயில் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 357 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 282 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதே வேளையில் இந்த பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி 256 இன்னிங்ஸ்களில் 278 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் டெல்லி அணிக்கெதிராக நடைபெற இருக்கும் இன்றைய போட்டியில் அவர் நான்கு சிக்ஸர்களை விளாசினால் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும். அதே வேளையில் 5 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் இந்த போட்டிலேயே அவர் ரோகித் சர்மாவை முந்தவும் வாய்ப்பு காத்திருக்கிறது.

இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயர் ஐபிஎல்’க்கு நல்லருந்தாலும் இந்தியாவுக்கு ஆபத்து தான்.. ஜாம்பவான் டிராவிட் எச்சரிக்கை

பெங்களூரு மைதானம் அளவில் சிறியவை என்பதனால் அதிக சிக்ஸர்கள் வர வாய்ப்புள்ளது. எனவே துவக்க ஆட்டக்காரராக விளையாட இருக்கும் விராட் கோலி இன்று ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement