நைட் 12.45 மணி வரை பிராக்டீஸ்.. கிரிக்கெட்டை சுவாசிக்கும் அவர் எதிரணிகளை தெறிக்க விடுவாரு.. உத்தப்பா கருத்து

Robin Uthappa
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரசிகர்களை மகிழ்வித்து கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இம்முறை யசஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, துருவ் ஜுரேல் போன்ற இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் இந்த வீரர்கள் சமீப காலங்களில் சிறப்பாக விளையாடி நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதமடித்து வரலாறு படைத்த ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்தார். அதன் காரணமாக இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதைத்தொடர்ந்து சீனாவில் நடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காலிறுதியில் சதமடித்த அவர் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார்.

- Advertisement -

சுவாசித்து சாப்பிட்டு:
அதன் பின் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவிய அவர் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் கிரிக்கெட்டை சுவாசித்து சாப்பிட்டு வாழும் வீரராக ஜெய்ஸ்வால் திகழ்வதாக ராபின் உத்தப்பா பாராட்டியுள்ளார். அதாவது அந்தளவுக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வத்தை கொண்ட ஜெய்ஸ்வால் மதியம் 2 மணி முதல் இரவு 12.45 மணி வரை பயிற்சி செய்ததை பலமுறை பார்த்துள்ளதாக உத்தப்பா கூறியுள்ளார்.

அதே போல சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட், துருவ் ஜுரேல் ஆகிய இளம் வீரர்களும் 2024 ஐபிஎல் தொடரில் அசத்துவார்கள் என்று தெரிவிக்கும் உத்தப்பா இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் 2020 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக முதல் முறையாக வந்த போது நான் ஜெய்ஸ்வாலுடன் நெருங்கி வேலை செய்துள்ளேன்”

- Advertisement -

“அதிக ஆர்வம் கொண்டவரான அவருக்கு கிரிக்கெட்டை தவிர்த்து எதுவும் தெரியாது. அவர் கிரிக்கெட்டை மட்டுமே வாழ்கிறார் சுவாசிக்கிறார் சாப்பிடுகிறார். பெஞ்சில் இருக்கும் போது அவர் தன்னுடைய ஆட்டத்தை பற்றி தனக்குத்தானே பேசிக் கொள்வதை உங்களால் பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக ஒருமுறை மதியம் 2 மணிக்கு ஆர்ஆர் அகாடமியில் பயிற்சியை துவங்கிய அவர் இரவு 12.45 மணி வரை பேட்டிங் செய்துக்கொண்டே இருந்தார்”

இதையும் படிங்க: முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருப்பது குறித்து பேசிய – ஹார்டிக் பாண்டியா

“அதே போல ருதுராஜ் கைக்வாட். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய திறமை கொண்ட அவர் தற்போதை விட இந்தியாவுக்கு அதிக போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். இருப்பினும் இந்திய அணியில் நிறைய போட்டியிருப்பதால் அவர் அதிகம் விளையாடவில்லை. துருவ் ஜுரேலையும் நான் விரும்புகிறேன். வருங்காலத்தில் அசத்தக்கூடிய வீரரான அவர் ஃபினிஷராக வருவார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement