முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருப்பது குறித்து பேசிய – ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

கடந்த 2015-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா இதுவரை 123 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2309 ரன்களை குவித்துள்ளார். பேட்டிங்கில் 145 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 30 ரன்கள் சராசரியுடன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் பந்துவீச்சிலும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக வாய்ப்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து முன்னணி வீரராக பயணித்து வரும் ஹார்டிக் பாண்டியா அவ்வப்போது காயம் அடைவது வழக்கமானாலும் காயத்திலிருந்து மீண்டு வந்தால் தவிர்க்க முடியாத வீரராக இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

அதேபோன்று 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய அவர் கடைசியாக இரண்டு சீசன்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருந்தார். அதில் ஒரு முறை கோப்பையை வென்ற அவர் கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை குஜராத் அணியை கொண்டு சென்றிருந்தார்.

இப்படி அவரது சிறப்பான செயல்பாடுகள் காரணமாக மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை குஜராத் அணியிடம் இருந்து விலைக்கு வாங்கி மும்பை அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. இதன் காரணமாக ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண வீரராக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் பதவியை ஏற்ற பாண்டியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடை மீண்டும் அணிவதை மிகச் சிறப்பு வாய்ந்த தருணமாக உணர்கிறேன். எனது ஐபிஎல் கிரிக்கெட் பயணம் தொடங்கிய இடத்திற்கு நான் மீண்டும் திரும்பி வந்து விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க : விராட் கோலியை கூட சமாளிச்சிடலாம்.. ஆனா அவர் டேஞ்சரான இந்திய பேட்ஸ்மேன்.. பிரவீன் குமார் கருத்து

எல்லோரும் பெருமைப்படும் அளவிற்கு மும்பை அணிக்கு உரித்தான (ஆக்ரோஷமான) பாணியில் இந்த சீசனில் நாங்கள் விளையாடுவோம். ஏற்கனவே ஐந்து முறை நாங்கள் கோப்பையை வென்றுள்ளோம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement