விராட் கோலியை கூட சமாளிச்சிடலாம்.. ஆனா அவர் டேஞ்சரான இந்திய பேட்ஸ்மேன்.. பிரவீன் குமார் கருத்து

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. பொதுவாக ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஏதேனும் சில வீரர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி பெரிய ரன்கள் குவிப்பது வழக்கமாகும்.

அந்த வகையில் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக காயத்தை சந்தித்தும் ஒற்றைக்காலில் இரட்டை சதமடித்து நொறுக்கிய கிளன் மேக்ஸ்வெல் இம்முறை கட்டுக்கடங்காத பேட்ஸ்மேனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இந்திய வீரர்களை பொறுத்த வரை இங்கிலாந்து தொடரில் விளையாடாமல் ஓய்வெடுத்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்து தற்போது சூப்பரான ஃபார்மில் உள்ளார்.

- Advertisement -

டேஞ்சரான பேட்ஸ்மேன்:
அத்துடன் இங்கிலாந்து தொடரில் 712 ரன்கள் குவித்து உச்சகட்ட பார்மில் இருக்கும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இம்முறை எதிரணிகளை பந்தாடுவார் என்று நம்பப்படுகிறது. அதே போல ரிங்கு சிங், திலக் வர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் எதிரணிகளுக்கு ஆபத்தை கொடுக்கும் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி போன்ற இந்திய பேட்ஸ்மேன்களை விட ரோகித் சர்மா தான் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன் என்று முன்னாள் வீரர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு எதிராக உள்ளூரில் நான் நிறைய விளையாடியுள்ளேன். உங்களால் விராட் கோலியை சமாளிக்க முடியும். அந்த சமயத்தில் அவரை உங்களால் எளிதாக சமாளிக்க முடிந்தது”

- Advertisement -

“இப்போது அனுபவத்தால் முன்னேறியுள்ள அவரை சமாளிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். அதே போல ரோகித் சர்மாவையும் சமாளிக்க முடியும். ஆனால் என்னைப் பொறுத்த வரை ரோஹித் சர்மா ஆபத்தான பேட்ஸ்மேன்” என்று கூறினார். அவர் சொல்வது போல கடந்த 2023 உலகக் கோப்பையில் விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா அதிரடியான ஸ்ட்ரைக் ரைட்டில் ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: 10% ஃபிட்டாக இருந்தாலும் தோனி ஆடுவாரு.. ஆனா கேப்டன்ஷிப்ல அந்த பிரமோஷன் பண்ண வாய்ப்பிருக்கு.. ராயுடு கணிப்பு

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில், ஷாஹித் அப்ரிடி ஆகியோரை முந்தி அதிக சிக்சர்கள் அடித்த வீரராகவும் ரோகித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார். எனவே ரோகித் சர்மா அன்றும் இன்றும் எதிரணிகளுக்கு ஆபத்தான பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்றால் மிகையாகாது. எனவே இம்முறை மும்பைக்காக கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடும் அவர் அதிரடியாக ரன் குவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement