10% ஃபிட்டாக இருந்தாலும் தோனி ஆடுவாரு.. ஆனா கேப்டன்ஷிப்ல அந்த பிரமோஷன் பண்ண வாய்ப்பிருக்கு.. ராயுடு கணிப்பு

- Advertisement -

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் துவங்கும் இந்த வருடத்தின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த வருடம் சென்னை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிகராக தோனி ஓய்வு பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

ஏனெனில் 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். தற்போது 41 வயதை கடந்துவிட்ட அவர் கடந்த வருடம் முழங்கால் வலியை தாண்டி சிறப்பாகவே கேப்டன்ஷிப் செய்து சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவினார். இருப்பினும் முழங்கால் வலியால் முழுமையாக பேட்டிங் செய்யாத அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவார் என்ற நிலைமையிலேயே இருக்கிறார்.

- Advertisement -

ராயுடு கணிப்பு:
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் 10% மட்டுமே ஃபிட்டாக இருந்தாலும் காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடக்கூடிய மன உறுதி எம்எஸ் தோனியிடம் இருப்பதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இருப்பினும் 41 வயதை கடந்த தோனி இந்த வருடம் இம்பேக்ட் வீரர் விதிமுறையை பயன்படுத்தி கேப்டன்ஷிப்பை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ராயுடு கணித்துள்ளார்.

அதாவது இம்பேக்ட் வீரர் விதிமுறையை பயன்படுத்தி ஒரு போட்டியின் ஏதோ ஒரு இன்னிங்ஸில் வருங்கால கேப்டனாக கருதப்படும் வீரரிடம் கேப்டன்ஷிப் பொறுப்பைதோனி கொடுப்பதற்கான வாய்ப்புள்ளதாக ராயுடு தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இம்பேக்ட் விதிமுறையை பயன்படுத்தி அவர் இருக்கையின் பின்னே அமர்ந்து யாராவது ஒருவரை பாதியிலேயே கேப்டனாக ப்ரோமோஷன் செய்வதற்கு வாய்ப்புள்ளது”

- Advertisement -

“எனவே இந்த ஐபிஎல் தோனிக்கு கடைசியாக இருக்கும் பட்சத்தில் இது சிஎஸ்கே அணியில் மாற்றம் ஏற்படும் வருடமாக அமையலாம். அதே சமயம் இன்னும் சில வருடங்கள் விளையாடலாம் என்று முடிவெடுத்து விட்டால் தோனி தொடர்ந்து கேப்டனாக இருப்பார். தனிப்பட்ட முறையில் நான் தோனி கேப்டனாக பார்ப்பதையே விரும்புகிறேன். ஒருவேளை அவர் இந்த வருடம் விளையாட முடிவெடுத்து விட்டால் 10% மட்டுமே ஃபிட்டாக இருந்தாலும் கண்டிப்பாக விளையாடுவார்”

இதையும் படிங்க: சாய் சுதர்சனிடம் அந்த திறமை இருக்கு.. கஷ்டமான வேலையை முடிப்பதில் ரிங்கு ஸ்பெஷல்.. கும்ப்ளே பாராட்டு

“ஏனெனில் அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். காயங்கள் அவரைப் கிரிக்கெட்டிலிருந்து வெளியே வைக்க முடியாது. இதற்கு முன்பும் அவர் எங்களுடன் விளையாடியுள்ளார். சொல்லப்போனால் கடந்த வருடம் கூட மோசமான முழங்கால் வலியுடன் அவர் விளையாடினார். எனவே முடிவெடுத்து விட்டால் அவர் முழு ஐபிஎல் தொடரில் விளையாடுவதை எதுவும் தடுக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement