சாய் சுதர்சனிடம் அந்த திறமை இருக்கு.. கஷ்டமான வேலையை முடிப்பதில் ரிங்கு ஸ்பெஷல்.. கும்ப்ளே பாராட்டு

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகளும் தயாராகியுள்ளன. பொதுவாக ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் தரமான இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பது வழக்கமாகும்.

அந்த வரிசையில் இம்முறை ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் இந்திய வீரர்கள் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் தம்மைப் பொறுத்த வரை கொல்கத்தா அணிக்காக விளையாடும் ரிங்கு சிங் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகிய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புவதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கும்ப்ளே நம்பிக்கை:
குறிப்பாக அழுத்தமான லோயர் மிடில் ஆர்டரில் வந்து வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யும் கடினமான வேலையை ரிங்கு சிங் மிகவும் எளிதாக செய்யும் ஸ்பெஷலான திறமை கொண்டிருப்பதாக கும்ப்ளே பாராட்டியுள்ளார். அதே போல டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் திறமை சாய் சுதர்சனிடம் இருப்பதாகவும் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிங்கு சிங் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக செயல்படப் போகிறார். கொல்கத்தா மற்றும் இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் 6 அல்லது 7வது இடத்தில் வந்து உங்களுடைய அணிக்காக ஃபினிஷிங் செய்யும் கடினமான வேலையை அவர் செய்து வருகிறார். உண்மையாகவே என்னை பொறுத்த வரை அது மிகவும் ஸ்பெஷலாகும்”

- Advertisement -

“சாய் சுதர்சன் நம்மை கவரும் வகையில் செயல்படுகிறார். அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக் கூடியவர் என்று நான் நினைக்கிறேன். அதற்கான திறமை மற்றும் டெக்னிக் அவரிடம் இருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த வருடம் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமற்ற வெற்றியை பெற்றுக் கொடுத்த ரிங்கு சிங் இந்தியாவுக்காக அறிமுகமாகியுள்ளார்.

இதையும் படிங்க: ரெய்னாவிற்கு அடுத்து இரண்டாவது சி.எஸ்.கே வீரராக ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – தல தோனி

அந்த வாய்ப்பில் இதுவரை விளையாடிய பெரும்பாலான போட்டிகளிலும் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்த அவர் இந்த ஐபிஎல் தொடரிலும் அதிரடியான ஃபினிஷராக செயல்படுவார் என்று நம்பப்படுகிறது. அதே போல 2023 ஐபிஎல் ஃபைனலில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் விளாசி உள்ளூர் கிரிக்கெட்டிலும் அசத்திய சாய் சுதர்சன் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அரை சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement