ரெய்னாவிற்கு அடுத்து இரண்டாவது சி.எஸ்.கே வீரராக ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – தல தோனி

Dhoni-and-Raina
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரானது சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

தற்போது 42 வயதை எட்டியுள்ள தோனி இந்த ஆண்டு ஓய்வு அறிவிப்பார் என்பதனால் தோனியை காண லட்சக்கணக்கில் ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுக்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறயிருக்கும் ஐபிஎல் தொடரில் தோனி சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து மிக முக்கியமான சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அந்த வகையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 5000 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே சி.எஸ்.கே வீரராக சுரேஷ் ரெய்னா இருந்து வரும் வேளையில் அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை தோனி பிடிக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை விளையாடிய சுரேஷ் ரெய்னா 205 போட்டிகளில் பங்கேற்று 5528 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் தோனி எதிர்வரும் இந்த சீசனில் இன்னும் 43 ரன்களை குவித்தால் ஐபிஎல் தொடரில் மட்டும் 5000 ரன்களை குவித்த இரண்டாவது சிஎஸ்கே வீரர் என்ற சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

இதையும் படிங்க : தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் தோனி டாப் ஆர்டரில் விளையாடுவாரா? – அம்பத்தி ராயுடு அளித்த பதில்

இது குறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று நடப்பு சாம்பியனாக விளையாட இருக்கும் சென்னை அணி இந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று சாம்பியன் கேப்டனாகவே தோனியை வழியனுப்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement