தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் தோனி டாப் ஆர்டரில் விளையாடுவாரா? – அம்பத்தி ராயுடு அளித்த பதில்

Rayudu-and-Dhoni
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான குஜராத் அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. அதோடு அந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனாக 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் தொடரிலும் சென்னை அணி அடியெடுத்து வைக்க இருக்கிறது.

இந்த தொடரில் முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து சென்னை அணியானது சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 22-ஆம் தேதி பலப்பரீட்சை நடத்த இருக்ககிறது. இந்த தொடரானது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி தொடராக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் தற்போது 42 வயதை எட்டியுள்ள தோனி அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற இருப்பதினால் இந்த ஆண்டு ஓய்வு முடிவினை அறிவித்து விடுவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தோனிக்கு தற்போது 42 வயதாகி இருந்தாலும் இன்றளவும் அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருவதால் அவர் இன்னும் சில சீசன்கள் விளையாட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ஆனால் கிட்டத்தட்ட தோனி இந்த ஆண்டு ஓய்வை அறிவிப்பார் என்பது உறுதியாகியுள்ள வேளையில் அவர் டாப் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு கூறுகையில் :

- Advertisement -

தோனி டாப் ஆர்டரில் களமிறங்க வேண்டும் என பலரும் கூறி வருவதை நானும் பார்த்து வருகிறேன். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே தோனி பினிஷராக மட்டுமே சென்னை அணியில் விளையாடி வருகிறார். அதோடு எப்போதுமே அவர் இளம் வீரர்களை ஊக்குவித்து அவர்களுக்கு ப்ரமோஷன் கொடுத்து டாப் ஆர்டரில் விளையாட வைப்பது அவரது வழக்கம். அந்த வகையில் நிச்சயம் இந்த சீசனிலும் அவர் இளம் வீரர்களை தான் டாப் ஆர்டரில் விளையாட வைப்பார்.

இதையும் படிங்க : தோனி அந்த விஷயத்துல கில்லாடி.. அதுதான் சி.எஸ்.கே அணியின் சக்ஸஸ்க்கும் காரணம் – பத்ரிநாத் பேட்டி

என்னை பொறுத்தவரை தோனி தனது பேட்டிங் ஆர்டரில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் முன்கூட்டி இறங்கலாம் ஆனால் டாப் ஆர்டரில் அவர் விளையாட வாய்ப்பே இல்லை என்று வெளிப்படையாகவே தனது கருத்தினை அறிவித்துள்ளார். ராயுடு கூறியது போலவே : தோனி பினிஷராகவே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் அவர் அந்த இடத்தில் தான் களமிறங்குவார் என்று நம்பலாம்.

Advertisement