தோனி அந்த விஷயத்துல கில்லாடி.. அதுதான் சி.எஸ்.கே அணியின் சக்ஸஸ்க்கும் காரணம் – பத்ரிநாத் பேட்டி

Badrinath
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியே சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெரிய அணிகளுக்கு இடையே நடைபெற இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஐபிஎல் தொடரானது பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் முதல் போட்டியை வெற்றியுடன் துவங்க வேண்டும் என சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் மார்ச் 22-ஆம் தேதி துவங்கும் இந்த ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தமிழ் வர்ணனையாளர்கள் குழுவில் முன்னாள் வீரர்களான ஸ்ரீகாந்த், பத்ரிநாத், எல்.பாலாஜி போன்ற நட்சத்திரங்களுடன் 14 பேரை சேர்த்துள்ளது.

இந்நிலையில் வர்ணனையாளர் பட்டியல் அறிவிப்பு நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய முன்னாள் சி.எஸ்.கே வீரரான பத்ரிநாத் அளித்த பேட்டியில் சென்னை அணி குறித்தும் தோனி குறித்தும் பல்வேறு சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த சீசனில் அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களுடன் ஆடிய சென்னை அணி தோனியின் சரியான வழி நடத்துதலின் கீழ் கோப்பையை வென்றது.

- Advertisement -

தோனிக்கு சி.எஸ்.கே அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி தெரியும். ஒரு கேப்டனாக வீரர்களை நன்கு புரிந்து கொண்டு அவர்களை கையாளுவதில் அவர் கில்லாடி. வீரர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தோனிக்கு நன்றாக தெரியும். எந்த சமயத்தில் என்ன மாற்றங்களை கொண்டு வந்து அணியை வெற்றிபெற வைக்க முடியும் என்பதும் அவருக்கு நன்றாக தெரியும்.

இதையும் படிங்க : ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயரின் மீது கரிசனம் காட்டவுள்ள பி.சி.சி.ஐ – விவரம் இதோ

அதுதான் சென்னை அணியின் வெற்றியின் ரகசியமாகவும் இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னை அணியில் நல்ல பந்துவீச்சு யூனிட் இருப்பதினால் நிச்சயம் இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக இருக்கும். தோனியும் முழு உடற்தகுதியுடன் இருப்பதினால் இந்த தொடர் முழுவதும் அவர் மிக சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என பத்ரிநாத் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement