ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயரின் மீது கரிசனம் காட்டவுள்ள பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Shreyas
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்த இந்திய வீரர்களின் வருடாந்திர சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து முன்னணி இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது பெயர் நீக்கப்பட்டது பெருமளவில் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது. உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ வேண்டுகோள் விடுத்தும் அதனை நிராகரித்ததன் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே அந்த நீக்கம் அமைந்ததாகவும் பேசப்பட்டது.

மேலும் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் இணைந்து விளையாடாத நேரத்தில் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்கள் நடைபெறும் போது அந்த தொடர்களில் பங்கேற்று விளையாடுமாறு இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு நேரடியாகவே பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.

- Advertisement -

ஆனால் இசான் கிஷன் ஜார்கண்ட் மாநில அணிக்காக ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாட மறுத்தார். அதுமட்டும் இன்றி பாண்டியா சகோதரர்களுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பிரத்யேக பயிற்சியினையும் மேற்கொண்டார். அதனால் அவர் மீது பிசிசிய் கடும் அதிருப்தியில் உள்ளது.

ஆனால் மற்றொரு வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் ரஞ்சிக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் மும்பை அணியுடன் இணைந்து விளையாடி உள்ளார். குறிப்பாக விதர்பா அணிக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் திகழ்ந்தார்.

- Advertisement -

குறிப்பாக மும்பை அணியின் வெற்றிக்கு தேவையான நேரத்தில் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது 95 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவரது இந்த செயல்பாட்டை கருத்தில் கொண்டு மீண்டும் அவரை வருடாந்த ஊதிய ஒப்பந்த பட்டியலில் சேர்க்கலாமா? என பி.சி.சி.ஐ ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : இந்திய அணிக்காக நான் அறிமுகமான பின்னர் என்னுடைய வளர்ச்சி என்ன தெரியுமா? – சர்பராஸ் கான் கலகலப்பு

மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்படவுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20 உலக கோப்பை அணிக்காகவும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement