என்ன நேர்மையான மனசு.. 3 விக்கெட் எடுத்தும் சோகமாக பேசிய அர்ஷ்தீப்.. உத்தப்பா, ஆகாஷ் சோப்ரா பாராட்டு

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் லக்னோவை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 172 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 44 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 69, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 52*, நேஹல் வதேரா 43* ரன்கள் அடித்து அசத்தினர். அதனால் 16.2 ஓவரில் 177-2 ரன்கள் எடுத்த பஞ்சாப் தங்களது 2வது வெற்றியை வெற்றி பெற்று அசத்தியது. முன்னதாக அந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

நேர்மையான அர்ஷ்தீப்:

2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் அணிக்காக அசத்தி வருகிறார். இருப்பினும் இந்தப் போட்டியில் 4 ஓவரில் அவர் 43 ரன்களை எடுத்தார். அதன் காரணமாக தனது பவுலிங் சராசரியாக மட்டுமே இருப்பதாக போட்டியின் இடைவெளியில் அர்ஷ்தீப் சிங் ஏமாற்றத்துடன் பேசினார்.

எனவே தமது பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை என்று தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி செய்த இந்த பிட்ச்சில் எனது பவுலிங் சராசரியாகவே இருந்தது. அது போன்ற சூழ்நிலையில் நான் இன்னும் கொஞ்சம் நன்றாக பவுலிங் செய்து குறைவாக ரன்கள் கொடுத்திருக்க வேண்டும்”

- Advertisement -

உத்தப்பா பாராட்டு:

“குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி நின்று வந்தது. எனவே பிட்ச்சில் எக்ஸ்ட்ரா உதவி இருந்தது. அது போன்ற சூழ்நிலையில் நான் சரியான லென்த்தில் இன்னும் கொஞ்சம் நன்றாக பந்து வீசி இருந்தால் எதிரணியின் ஸ்கோர் வித்தியாசமாக இருந்திருக்கும்” என்று வருத்தத்துடன் பேசினார். அதை பார்த்த முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா என்ன ஒரு நேர்மையான மனசு என்று அவரை பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: தம்பி விராட் கோலி செஞ்சதை மறந்துட்டிங்களா? அவங்க இதை செஞ்சா தாங்குவிங்களா? இளம் வீரரை சாடிய கவாஸ்கர்

இது பற்றி ட்விட்டரில் உத்தப்பா பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்தப் பேட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இந்தப் பையன் (அர்ஷ்தீப்) சிந்திக்கும் விதத்தை விரும்புகிறேன். நேர்த்தியான சாம்பியன் பிளேயர். இந்தப் பேட்டியைப் பார்த்து இவரின் மனநிலையைப் புரிந்து கொள்ளுங்கள் அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார். அதே போல மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் அவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement