
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியானது நேற்று ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 40 ரன்களுக்கு எல்லாம் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோரது ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. அதன் பின்னர் இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 167 ரன்கள் குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி 125 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 58 ரன்களையும், ரியான் பராக் 22 ரன்களையும் குவித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது பார்ட்னர்ஷிப் குறித்து பேசியிருந்தது ரியான் பராக் கூறுகையில் : முதல் போட்டியில் ஏற்பட்ட சறுக்களுக்கு பின்னர் தற்போது மிகச் சிறப்பாக இந்த நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்துள்ளோம்.
அபிஷேக் சர்மாவுடன் நான் ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இணைந்து விளையாடி இருக்கிறேன். தற்போது ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய ஜெர்சியில் அவருடன் விளையாடுவது மகிழ்ச்சி. அதேபோன்று இந்த போட்டியில் நாங்கள் ஆரம்பத்திலேயே சறுக்கலை கண்டபோது சஞ்சு சாம்சனிடம் ஐபிஎல் தொடரில் எவ்வாறு பார்ட்னர்ஷிப் அமைப்போமோ அதனைப் போன்று இங்கும் செய்யலாம் என்று கூறினேன்.
இதையும் படிங்க : புதுமண தம்பதிகளான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சென்ட் ஆகியோருக்கு தோனி கூறிய அட்வைஸ் – என்ன தெரியுமா?
மேலும் இறுதிக்கட்டத்தில் விக்கெட்டுகள் நம் கைவசம் இருந்தால் ஒருத்தி ஓவர்களில் அதிரடியாக விளையாட முடியும் என்பதனால் மிடில் ஓவர்களில் நாங்கள் நிலைத்து நின்று விளையாட திட்டமிட்டோம் என்றும் சுப்மன் கில் தலைமையில் விளையாடுவது மகிழ்ச்சி என்றும் ஏற்கனவே தான் அவரது தலைமையின் கீழ் விளையாடி உள்ளதாகவும் ரியான் பராக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.