புதுமண தம்பதிகளான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சென்ட் ஆகியோருக்கு தோனி கூறிய அட்வைஸ் – என்ன தெரியுமா?

Dhoni
- Advertisement -

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோரது திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் கடந்த ஜூலை 12-ம் தேதி மிகப் பிரம்மாண்ட முறையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து தான் கடந்த சில நாட்களாக அதிகளவு பேசப்பட்டு வருகிறது.

இந்த திருமண நிகழ்வில் உலக தலைவர்கள், உலக அளவில் உள்ள முக்கிய பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், பிற துறையை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

- Advertisement -

அந்த வகையில் பிரமாண்டமாக நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோரது இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமான மகேந்திர சிங் தோனி அவரது குடும்பத்தோடு நேரில் சென்று அவர்களை வாழ்த்தினார்.

அதுமட்டுமின்றி தற்போது திருமணம் முடித்த கையோடு அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பகிர்ந்து வாழ்த்து மற்றும் அறிவுரையை வழங்கியுள்ளார். அந்த வகையில் தோனி குறிப்பிட்டுள்ள அந்த பதிவில் :

- Advertisement -

“ராதிகா உங்களுடைய இந்த சிரிப்பு என்றுமே மங்கக்கூடாது. ஆனந்த் உங்களை சுற்றியுள்ள அனைவரிடமும் நீங்கள் காட்டும் அன்பும், கருணையும் ராதிகாவிடமும் காண்பியுங்கள். அவரை அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை எவ்வித நெருடலும் இன்றி மகிழ்ச்சியும், சிரிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும்.

இதையும் படிங்க : சீனியர்கள் வந்தாலும் இலங்கை தொடரில் இந்த பையனை கழற்றி விட்றாதீங்க.. கம்பீருக்கு சபா கரீம் கோரிக்கை

விரைவில் சந்திப்போம் வாழ்த்துக்கள் என தோனி புதுமண தம்பதியரை மனதார வாழ்த்தி உள்ளார். பொதுவாகவே சமூகவலைதள பக்கத்தில் அதிகளவு எந்தவொரு விடயத்தையும் பகிரும் பழக்கம் இல்லாதவரான தோனி இப்படி புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement