இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு நான் இன்னும் தகுதி பெறவில்லை. ஏன் தெரியுமா? – ரியான் பராக் வெளிப்படை

Riyan Parag 56.jpeg
Advertisement

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 20 வயது ஆல்-ரவுண்டராக ரியான் பராக் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அனைவரது கவனத்தையும் தனது மோசமான செயல்பாட்டினால் இழுத்துள்ளார் என்றே கூறலாம். ஏனெனில் ஹர்ஷல் படேல் உடனான மோதல் மற்றும் கேட்ச் பிடித்த பின்பு அம்பயர்களை கிண்டல் செய்யும் வகையில் நடந்து கொள்வது அதோடு சீனியர் வீரர்களுக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்துவது என்பது போன்ற மோசமான செயல்பாட்டினால் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சிக்கப்பட்ட பராக் சிலமுறை ராஜஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

parag 2

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய அவர் 183 ரன்களை குவித்து இருந்தார். அதோடு பெங்களூர் அணிக்கு எதிரான ஒரு முக்கியமான போட்டியில் 56 ரன்கள் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். இனிவரும் சீசன்களில் ரியான் பராக்கை மிகப் பெரிய வீரராக மாற்றுவேன் அவரிடம் நல்ல திறமை இருக்கிறது என்று ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்ககாரா புகழும் அளவிற்கு அவர் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் தான் இன்னும் இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு தகுதியானவராக மாறவில்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் விளையாடும் எனது அணிக்காக ஒரு சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று கொடுத்தால் அது மட்டும் போதாது. இந்திய அணியில் விளையாட வேண்டுமெனில் நான் விளையாடும் அணிக்காக ஒரு சீசனில் 6-7 போட்டிகளில் வெற்றி பெற்று தர வேண்டும். அப்போதுதான் என்னை இந்திய அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிப்பார்கள். நான் தற்போது உள்ள இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து எந்த வருத்தமும் அடையவில்லை.

MS Dhoni Riyan Parag

ஏனெனில் தற்போது நான் இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு தகுதியானவன் கிடையாது என்பது எனக்கு தெரியும். இருப்பினும் இனிவரும் சீசன்களில் என்னுடைய பேட்டிங் திறனை மேம்படுத்திக் கொண்டு எனது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பேன். அப்படி நான் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது உள்ள அணியில் நான் ஆறாவது ஏழாவது இடத்தில் தான் பேட்டிங் செய்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த இடமாக பின்வரிசையில் விளையாடுவதுதான் இதுவரை இருந்துள்ளது. நிச்சயம் என்னுடைய பேட்டிங் பொசிஷன் நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அணிக்காக தோனி பின்வரிசையில் களமிறங்கி எதைச் செய்தாரோ அதே போன்று நானும் ஒரு சிறந்த பினிஷராக மாற விரும்புகிறேன்.

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த பல ஆண்டுகால காத்திருப்பு. முதன்முறையாக இந்திய அணியில் வாய்ப்பினை பெற்ற – 31 வயது வீரர்

அந்த வகையில் இனி வரும் ஆண்டுகளில் எனது முழு முயற்சியையும் வெளிப்படுத்தி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று ரியான் பராக் கூறியுள்ளார். அசாமை சேர்ந்த 20 வயது வீரரான ரியான் பராக் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் இருந்து விளையாடி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான இவர் 47 போட்டிகளில் விளையாடி 522 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement