முடிவுக்கு வந்த பல ஆண்டுகால காத்திருப்பு. முதன்முறையாக இந்திய அணியில் வாய்ப்பினை பெற்ற – 31 வயது வீரர்

IND
Advertisement

இந்தியாவில் கடந்த வாரம் ஜூன் 9-ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் 19-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த தொடரினை அடுத்து ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணியானது இங்கிலாந்து தொடருக்காக அங்கு செல்ல உள்ளது. அதேவேளையில் அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது. இதன் காரணமாக இளம் வீரர்களை கொண்ட இரண்டாவது அணி லட்சுமணன் தலைமையில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND vs RSA Chahal Axar Patel

இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்று இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலமாக அறிவித்திருந்தது. அதில் தற்போதைய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்திய முதன்மை அணியுடன் இங்கிலாந்து செல்ல இருப்பதால் இந்த இரண்டாம் தர அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று ஐபிஎல் தொடரில் அசத்திய சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் சமீபகாலமாக காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்த சூர்யகுமார் யாதவ்க்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்படும் போதே இந்திய அணியில் ராகுல் திரிப்பாதி இடம் பெறவேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் இருந்து வந்தன.

tripathi

ஏனெனில் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது முதன்முறையாக இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் திரிப்பாதி 413 ரன்களை குவித்து இருந்தார். மூன்றாவது வீரராக களமிறங்கி அந்த தொடர் முழுவதுமே 158 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய ராகுல் திரிப்பாதி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை ராகுல் திரிப்பாதி பெற்றுள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்து தொடருக்காக பயணிக்க உள்ளதால் நிச்சயம் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் 3-வது வீரராக ராகுல் திரிப்பாதியே விளையாடுவார் என்பதனால் அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் ரசிகர்களும் அவர் இந்திய அணிக்காக விளையாடுவதை காண மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இதையும் படிங்க : அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமனம் – முழுலிஸ்ட் இதோ

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய அவர் இதுவரை 76 போட்டிகளில் விளையாடி 1798 ரன்களை குவித்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடும் ராகுல் திரிப்பாதிக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் முதல்முறையாக விளையாட உள்ளார். தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இருந்து வரும் ராகுல் திரிப்பாதி நிச்சயம் இத்தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார் என்பது உறுதி.

Advertisement