- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் 2025: ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக்கை அறிவித்த சாம்சன்.. காரணம் என்ன?

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த அணிகளுக்கு மத்தியில் 2008க்குப்பின் இரண்டாவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது. இந்த வருடம் அந்த அணிக்கு ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட உள்ளது பலமாக பார்க்கப்படுகிறது.

அவருடன் சேர்ந்து சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் முதல் 3 போட்டிகளில் ரியான் பராக் ராஜஸ்தான் கேப்டனாக செயல்படுவார் என்று சஞ்சு சாம்சன் அறிவித்துள்ளார். மேலும் தாம் வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட உள்ளதாகவும் சாம்சன் அறிவித்துள்ளார்.

- Advertisement -

ரியான் பராக் கேப்டன்:

அதாவது கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் கடைசி போட்டியில் சஞ்சு சாம்சன் தம்முடைய கைவிரலில் காயத்தை சந்தித்தார். அதிலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாத அவர் முதல் 3 போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

எனவே தமக்குப் பதிலாக ரியான் பராக் முதல் 3 போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார் என்று சாம்சன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளனர். அதே சமயம் முதல் 3 போட்டிகளிலும் சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி சாம்சன் அணி மீட்டிங்கில் தெரிவித்தது பின்வருமாறு.

- Advertisement -

சாம்சன் அறிவிப்பு:

“முதல் மூன்று போட்டிகளில் நான் முழுமையாக ஃபிட்டாக இல்லை. நமது அணியில் நிறைய லீடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தற்போதைய சூழ்நிலையை பார்த்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றுள்ளனர். அது போன்ற சூழ்நிலையில் நம்மை ரியான் பராக் நம்மை வழி நடத்துவார். அவருக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று சொன்னதும் ராஜஸ்தான் அணி வீரர்கள் ரியான் பராக்கிற்கு கை தட்டி பாராட்டினர்.

இதையும் படிங்க: அவங்க மென்டல் டார்ச்சர் பண்ணதை படமா எடுக்கலாம்.. சிங்கத்தை போல பாண்டியா 2025இல் இதை செய்வாரு.. ஃகைப்

இது பற்றி ராஜஸ்தான் அணி. “சஞ்சு முதல் 3 போட்டிகளில் எங்களுக்கு வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார். ரியான் பராக் அந்தப் போட்டிகளில் எங்களை வழி நடத்துவார்” என்று கூறியுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் முதல் 3 போட்டிகளில் பேட்ஸ்மனாக விளையாடும் அளவுக்கு ஃபிட்டாக இருக்கும் சாம்சன் கேப்டனாக விளையாடுவதற்கு தகுதி இல்லாமல் போய் விட்டாரா? என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -