அவங்க மென்டல் டார்ச்சர் பண்ணதை படமா எடுக்கலாம்.. சிங்கத்தை போல பாண்டியா 2025இல் இதை செய்வாரு.. ஃகைப்

Mohammed Kaif 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் மும்பை களமிறங்க உள்ளது. இம்முறை அவருக்கு மும்பை ரசிகர்கள் அமோகமான ஆதரவை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2024இல் கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.

அதற்கு மும்பை ரசிகர்களே உச்சகட்ட எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் சுமாராக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. இருப்பினும் அடுத்ததாக நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு பாண்டியா உதவினார்.

- Advertisement -

மென்டல் டார்ச்சர்:

அதனால் தற்போது அவருக்கு மும்பை ரசிகர்கள் மனதார ஆதரவு கொடுக்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் மும்பை ரசிகர்கள் பாண்டியாவை அவமானப்படுத்தி மனதளவில் டார்ச்சர் செய்ததாக முன்னாள் வீரர் முகமது ஃகைப் தெரிவித்துள்ளார். அதை வைத்து சுயசரிதை படமே எடுக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இம்முறை மும்பை அணியை பாண்டியா குறைந்தது பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்வார் என்று கணித்துள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கைஃப் பேசுவது பின்வருமாறு. “அந்த வலியை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு முன்னோக்கிச் சென்ற பாண்டியாவின் கம்பேக் கதை சிறப்பானது. அது மோசமான பயணம். ரசிகர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். மக்கள் அவரை முடிந்ததாக எழுதினர். அந்த வலியுடன் நகர்வது ஒரு வீரருக்குள் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருக்கும். அதை அவர் எப்போதும் மறக்க மாட்டார்”

- Advertisement -

கைப் பாராட்டு:

“அணியிலிருந்து நீக்குவதை விட அவமானப்படுத்துவது நல்ல அறிகுறி கிடையாது. அது அந்த வீரருக்கு மென்டல் டார்ச்சர் போன்றது. அது தான் பாண்டியாவுக்கு நடந்தது. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் க்ளாஸெனை அவுட்டாக்கிய அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஆடம் ஜாம்பாவுக்கு எதிராக சிக்ஸர்களை அடித்தார். அந்த வகையில் பேட்டிங் பௌலிங் துறைகளில் சிறப்பாக விளையாடிய அவர் சிங்கத்தைப் போல சண்டை போட்டார்”

இதையும் படிங்க: இதை செஞ்சா போதும்.. ஜுன் மாசம் பும்ரா, ஷமியை அடிச்சு இந்தியாவை தோற்கடிப்போம்.. பென் டக்கெட் சவால்

“ஒருவேளை பாண்டியா பற்றி சுயசரிதை எடுத்தார்கள் என்றால் அதில் கடந்த 7 மாதங்களில் அமைதியாக இருந்து அவர் கொடுத்த கம்பேக் கதைகள் இருக்க வேண்டும். 2025 ஐபிஎல் தொடரில் மும்பை அவரது தலைமையில் டாப் 4 இடங்களை உறுதியாகப் பிடிக்கும். ரசிகர்களும் ரோஹித் சர்மாவும் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். இந்தியாவுக்காக 2 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் போராடி வந்ததற்கு தலை வணங்குகிறேன்” என்று கூறினார்.

Advertisement