ஜுன் மாசம் பும்ரா, ஷமியை அடிச்சு இந்தியாவை தோற்கடிப்போம்.. இதை செஞ்சா போதும்.. பென் டக்கெட் சவால்

Ben Duckett
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடரை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அதில் 4 – 1 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை வென்ற இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.

அத்தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தாலும் கவலைப்பட மாட்டோம் என்று இங்கிலாந்து ஓப்பனிங் வீரர் பென் டக்கெட் தெரிவித்தார். ஏனெனில் அடுத்ததாக நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவையே தோற்கடித்து கோப்பையை வெல்லும் திறமை தங்களிடம் இருப்பதாக அவர் கூறினார். கடைசியில் அவர் சொன்னது போலவே 3 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு ஒயிட்வாஸ் தோல்வியை இந்தியா பார்சல் கட்டியது.

- Advertisement -

மீண்டும் சவால்:

2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஆஸ்திரேலியாவிடம் 356 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்ற இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடம் 320+ ரன்களை அடிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதனால் செமி ஃபைனலுக்கு கூட தகுதிப் பெறாமல் வெளியேறிய இங்கிலாந்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கலாய்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் இந்தியாவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து விளையாட உள்ளது. அதில் பும்ரா, ஷமி ஆகியோரை நன்றாக எதிர்கொண்டு இந்தியாவை தோற்கடிப்போம் என்று மீண்டும் பென் டக்கெட் சவால் விட்டுள்ளார். குறிப்பாக இந்தியா எப்போதும் வெளிநாட்டு மண்ணில் தடுமாறும் என்று தெரிவிக்கும் அவர் தனது திட்டம் பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்தியாவை சாய்ப்போம்:

“இந்தியாவை அதன் சொந்த மண்ணில் விளையாடுவதை விட வெளிநாட்டு மண்ணில் எதிர்கொள்வது வித்தியாசமாக இருக்கும். அவர்கள் நாங்கள் தோற்கடிக்கப்பட வேண்டிய அணி என்று நினைக்கிறேன். நாங்கள் அவர்களை தோற்கடிப்போம். அது நல்ல தொடராக இருக்கும். ஜஸ்ப்ரித் பும்ராவை 2024 மார்ச்சில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்கொண்டுள்ளேன்”

இதையும் படிங்க: பிசிசிஐ ஸ்ட்ரிக்ட்.. உங்களுக்காக அந்த விதிமுறையை மாற்ற முடியாது.. கோலி கோரிக்கையை நிரகாரித்த செயலாளர்

“எனக்கு எதிராக அவர் என்ன செய்வார் என்பது தெரியும். அவரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். எனவே அவர் எனக்கு எந்த ஆச்சரியத்தையும் கொடுக்கப் போவதில்லை. அவரை எதிர்கொள்வது சவாலாக இருக்கும். ஷமியின் திறமைகளும் பும்ராவை போலவே அச்சுறுத்தலை கொடுக்கக்கூடியது. ஆனால் அவர்களுடைய ஓப்பனிங் ஸ்பெலை கடந்து விட்டால் என்னால் ரன்கள் அடிக்க முடியும் என்று கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Advertisement