இங்க எதுக்கு வந்தமோ அதுக்கு சம்மந்தமான கேள்வியை மட்டும் கேளுங்க.. பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான ஜடேஜாவின் மனைவி

Rivaba-Jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் குடும்ப விவகாரம் குறித்த செய்திகள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் அண்மையில் ஜடேஜாவின் தந்தை அளித்த பேட்டியில் ஜடேஜாவின் மனைவி குறித்து ஏகப்பட்ட விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

அதாவது ரிவாபா திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் சொத்துக்கள் அனைத்தையும் அவரது பெயருக்கு மாற்றிவிட்டார். அதேபோன்று தற்போது ரவீந்திர ஜடேஜாவை முழுக்க முழுக்க அவரது மாமியார் குடும்பத்தினர் தான் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஒரே ஊரில் இருந்தும் நாங்கள் தனியாகவும், எங்கள் மகன் தனியாகவும் இருக்கிறார். தற்போது ஜடேஜாவின் வரவு செலவு கணக்குகள், வருமானம் என அனைத்தையும் ரிவாபா குடும்பத்தினரே பார்த்துக் கொள்கின்றனர் என்றும் ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் ஜடேஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படி ஜடேஜாவின் தந்தை அளித்த பேட்டி அனைவரது மத்தியிலும் வைரலாகவே அதற்கு பதிலளித்திருந்த ஜடேஜா : என் தந்தை கூறியது அனைத்தும் முற்றிலும் பொய்யானது. இந்த பேட்டியை புறக்கணியுங்கள். என் மனைவி மீதான நன் மதிப்பை சீர்குலைக்கும் முயற்சிதான் இது. இந்த நிகழ்வு முற்றிலும் சித்தரிக்கப்பட்ட ஒன்று என சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஜடேஜாவின் மனைவியான ரிவாபா ஜடேஜா தனது கட்சி நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்படி அங்கு நடைபெற்ற அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் : மாமனார் அனிருத் சிங் ஜடேஜா குறித்த கேள்வி ஒன்றினை ஒரு நிருபர் எழுப்பினார்.

இதையும் படிங்க : அவசரப்பட்டு அவரை உடனே டீம்லயே சேர்த்து விளையாட வைக்காதீங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

அதனால் கோபம் அடைந்த ரிவாபா : இங்கு என்ன காரணத்திற்காக வந்திருக்கிறோமோ அந்த காரணத்திற்கு சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டுமே கேளுங்கள். மற்றபடி தனிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும் என்றால் நேரடியாக என்னை தொடர்பு கொண்டு பேசலாம் என ஆவேசமாக கூறியுள்ளார். இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement