அவசரப்பட்டு அவரை உடனே டீம்லயே சேர்த்து விளையாட வைக்காதீங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

Akash-Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நினைவடைந்த வேளையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடியிருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறி இருந்தனர்.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது மீண்டும் அவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். அதேபோன்று காயம் குணமடைந்தால் மட்டுமே அவர்கள் விளையாடுவார்கள் என்றும் பி.சி.சி.ஐ தெளிவுபடுத்தி உள்ளது.

இந்நிலையில் காயத்திற்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்துள்ள ரவீந்திர ஜடேஜாவை உடனடியாக பிளேயிங் லெவனில் சேர்த்து விளையாட வைக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ரவீந்திர ஜடேஜாவை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உடனடியாக சேர்த்து விளையாட வைக்க கூடாது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் அவர் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்று விதத்திலுமே அசத்தலாக செயல்படக் கூடியவர். எனவே அவரை பத்திரமாக கையாள வேண்டும். அவரது உடற்தகுதியை கணக்கில் வைத்து தான் அவரை விளையாட வைக்கலாமா? வேண்டாமா? என்பதை குறித்து யோசிக்க வேண்டும்.

இதையும் படிங்க : 79 ரன்ஸ்.. ஹாட்ரிக் முறையாக இந்திய ரசிகர்களை உடைத்த ஆஸி.. 4 கோப்பைகளை வென்று உலக சாதனை

அதேபோன்று கே.எல் ராகுல் முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவரை நேரடியாக பிளேயிங் லெவனில் விளையாட வைக்கலாம் ஏனெனில் அவர் தற்போது விக்கெட் கீப்பராக இல்லாமல் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதால் அவரை நேரடியாக விளையாட வைக்கலாம் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement