79 ரன்ஸ்.. ஹாட்ரிக் முறையாக இந்திய ரசிகர்களை உடைத்த ஆஸி.. 4 கோப்பைகளை வென்று உலக சாதனை

- Advertisement -

நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தென்னாபிரிக்காவில் உள்ள பெனோனி நகரில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் 253/7 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஜஸ் சிங் 55, ஒலிவர் பீக்கே 46 ரன்கள், கேப்டன் ஹுக் வெய்ப்ஜென் 48 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 254 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு அர்சின் குல்கர்னி 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் முஷீர் கானும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

உடைந்த இந்திய ரசிகர்கள்:
ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் உதய் சஹரன் 8, சச்சின் தாஸ் 9, பிரியான்சு மோலியா 9, ஆரவல்லி அவனிஷ் 9 ரன்களில் அவுட்டாகி மெகா பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய மற்றொரு துவக்க வீரர் ஆதர்ஷ் சிங் 47 ரன்களில் அவுட்டாகி சென்றார். இறுதியில் 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 174 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியால் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க தவறிய இந்திய அணி 6வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அதை விட சீனியர் கிரிக்கெட்டில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியா தற்போது ஜூனியர் கிரிக்கெட்டையும் சேர்த்து ஹாட்ரிக் முறையாக இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்துள்ளது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சை மீண்டும் உடைத்தது.

- Advertisement -

மறுபுறம் இந்த அபாரமான வெற்றியால் 4வது முறையாக அண்டர்-19 கோப்பையை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பியர்ட்மேன் 3, ரஃக் மெக்மிலன் 3 விக்கெட்களை எடுத்தனர். அத்துடன் 2023 மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா ஆடவர் கிரிக்கெட்டில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றிருந்தது.

இதையும் படிங்க: தெளிவா ரன் அவுட்டுன்னு தெரிஞ்சும் அவுட் கொடுக்க மறுத்த அம்பயர் – வெ.இ ஆஸ்திரேலியா போட்டியில் நடைபெற்ற சம்பவம்

அதை தொடர்ந்து அண்டர்-19 உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா உலகிலேயே ஆடவர் மற்றும் மகளிர் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 4 தொடர்ச்சியான ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் அணியாக மாபெரும் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ஆஸ்திரேலியா முடி சூடா அரசனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement