தெளிவா ரன் அவுட்டுன்னு தெரிஞ்சும் அவுட் கொடுக்க மறுத்த அம்பயர் – வெ.இ ஆஸ்திரேலியா போட்டியில் நடைபெற்ற சம்பவம்

Spencer
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று வகையான தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் அடைந்த வேளையில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 11-ம் தேதி அடிலெயிடு நகரில் இரண்டாவது டி20 போட்டியானது நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை குவித்தது. பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 207 ரன்கள் மட்டுமே குவிந்ததால் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அல்சாரி ஜோசப் பேட்டிங் செய்யும்போது ரன் அவுட்டாகி இருந்தார். ஆனால் அதற்கு களத்தில் இருந்த அம்பயர் விக்கெட் கொடுக்க மறுத்த சம்பவம் தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் அல்சாரி ஜோசப் ரன் அவுட்டானபோது பந்தை த்ரோ செய்த பீல்டரும் சரி, பவுலரும் சரி அம்பயரிடம் மேல்முறையீடு செய்யாமல் அப்படியே நகர்ந்து சென்று விட்டனர். ஆனால் அடுத்த பந்தினை வீசுவதற்கு முன்னதாக ரீப்ளேவில் அவர் தெளிவாக ரன் அவுட்டாகியிருந்தது தெரியவந்தது. அதனால் வீரர்கள் அம்பயரிடம் சென்று அவுட் கேட்க அம்பயர் அந்த விக்கெட்டை கொடுக்க மறுத்தார்.

இதையும் படிங்க : வீட்ல இருந்து தான் யாரோ திருடி இருக்காங்க.. ப்ளீஸ் கண்டுபிடிச்சி குடுங்க – போலீசாரிடம் சவுரவ் கங்குலி புகார்

ஏனெனில் கிரிக்கெட் விதிமுறைகளின் படி மைதானத்தில் இருக்கும் வீரர்கள் முறையிட்டால் மட்டுமே விக்கெட் வழங்கப்படும். எந்த ஒரு முறையீடும் இல்லாமல் அம்பயர்கள் அவுட் கொடுக்க மாட்டார்கள் என்பதனாலேயே இப்படி ஒரு சம்பவம் இந்த போட்டியில் நடைபெற்றுள்ளது.

Advertisement