பொய் சொல்லாதீங்க.. மும்பை கேப்டனாக ரோஹித் நீக்கப்பட்டதன் காரணத்தை சொன்ன பவுச்சர்.. ரித்திகா அதிருப்தி

Ritika Sajdeh
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா வழி நடத்த உள்ளார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏனெனில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறிய மும்பைக்கு 2013ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா குறுகிய காலத்திலேயே 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான அணியாக மாற்றினார். இருப்பினும் சமீப காலங்களாகவே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை கழற்றி விட்டுள்ள மும்பை பாண்டியாவை வலுக்கட்டாயமாக குஜராத்திடமிருந்து வாங்கி கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதெல்லாம் உணமையில்ல:
இருப்பினும் அந்த நன்றி மறந்த செயலால் கொதித்த ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் மும்பையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இது முற்றிலும் கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்த முடிவு என்று நினைக்கிறேன். நாங்கள் பாண்டியாவை மீண்டும் கொண்டு வருவதற்கான ஜன்னலை பார்த்தோம். என்னை பொறுத்த வரை இது அடுத்த தலைமுறை உருவாகும் நேரமாகும். இந்தியாவில் இருக்கும் பலர் உணர்ச்சிபூர்வமானவர்கள் என்பதால் அதை புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துக் கொள்கின்றனர்”

- Advertisement -

“இருப்பினும் கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த முடிவு ரோஹித் சர்மாவிடமிருந்து ஒரு மனிதராகவும் வீரராகவும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் என்று நினைக்கிறேன். இந்த முடிவு அவரை மகிழ்ச்சியுடன் களத்திற்கு சென்று நல்ல ரன்களை அடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். மிகச்சிறந்த மனிதரான ரோகித் மும்பைக்காக நீண்ட காலம் கேப்டனாக செயல்பட்டார்”

இதையும் படிங்க: சச்சின் – கங்குலி மாதிரி அந்த 2 பேரும் அடுத்த தசாப்தத்தை ஆளப்போறாங்க.. சேவாக் பாராட்டு

“தற்போது இந்தியாவின் கேப்டனாகவும் முன்னேறியுள்ள அவரால் கடந்த 2 வருடங்களாக எங்களுக்கு பேட்டிங்கில் அசத்த முடியவில்லை. எனவே நாங்கள் ஒரு வீரராக அவர் களத்தில் விளையாடுவதைப் பற்றி நினைத்தோம். அதனால் கேப்டன் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் அவரால் அணிக்கு பெரிய மதிப்பை கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்” எனக் கூறினார். இருப்பினும் அதை பார்த்த ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே. “இதில் பல விஷயங்கள் தவறாக உள்ளது” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மார்க் பவுச்சர் சொன்ன கருத்துகளில் பாதி பொய் என்ற வகையில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement