சச்சின் – கங்குலி மாதிரி அந்த 2 பேரும் அடுத்த தசாப்தத்தை ஆளப்போறாங்க.. சேவாக் பாராட்டு

Virender Sehwag 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள இந்தியா 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தங்களை அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரோகித் சர்மா முதல் பும்ரா வரை இந்திய வீரர்களில் யாருமே 35 ரன்கள் கூட எடுக்கவில்லை. அப்போது அவர்களுக்கும் சேர்த்து எதிர்ப்புறம் சிறப்பாக விளையாடிய 22 வயதாகும் இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார்.

- Advertisement -

சச்சின் – கங்குலி மாதிரி:
சொல்லப்போனால் அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அதே போல 2வது இன்னிங்சில் 143 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியாவுக்கு மற்ற வீரர்கள் தடுமாற்றமாக விளையாடிய போது 24 வயதாகும் சுப்மன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து 104 ரன்கள் குவித்து கை கொடுத்தார்.

குறிப்பாக சமீப காலங்களாக சுமாராக செயல்பட்டதால் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனங்களை சந்தித்த அவர் தக்க சமயத்தில் இந்திய அணிக்கு கைகொடுத்து தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இறுதியில் பேட்டிங் துறையில் அந்த 2 இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவும் வெற்றி கண்டது. அதை விட அப்போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 2 வீரர்கள் சதமடித்த அரிதான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக நடந்தது.

- Advertisement -

இதற்கு முன் 1996ஆம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் 25 வயதுக்குள் சதமடித்திருந்தனர். இந்நிலையில் சச்சின் – கங்குலி போல 25 வயதுக்குள் அசத்தியுள்ள கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலக கிரிக்கெட்டில் அடுத்த தசாப்தத்தில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று வீரேந்தர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 6க்கு 6.. 528 ரன்ஸ்.. தெ.ஆ அணியை சொல்லி அடிக்கும் நியூஸிலாந்து.. சச்சினுக்கு சமமாக வில்லியம்சன் சாதனை

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த 2 இளம் வீரர்களை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. 25 வயதிற்குட்பட்ட அந்த இருவரும் இக்கட்டான நேரத்தில் உயர்ந்து நின்றனர். இந்த இருவரும் அடுத்த தசாப்தம் மற்றும் அதையும் தாண்டி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.

Advertisement