6க்கு 6.. 528 ரன்ஸ்.. தெ.ஆ அணியை சொல்லி அடிக்கும் நியூஸிலாந்து.. சச்சினுக்கு சமமாக வில்லியம்சன் சாதனை

NZ vs RSA 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ரபாடா, மார்க்ரம் போன்ற முக்கிய வீரர்கள் எஸ்ஏ டி20 தொடரில் விளையாடுவதால் நெய்ல் பிராண்ட் தலைமையிலான இளம் தென்னாபிரிக்க அணி களமிறங்கியுள்ளது. அந்த நிலையில் இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி நான்காம் தேதி மவுண்ட் மௌங்கனி நகரில் தொடங்கியது.

அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு டாம் லாதம் 20, டேவோன் கான்வே 1, டார்ல் மிட்சேல் 34, டாம் பிளண்டல் 11, கிளன் பிலிப்ஸ் 39 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

சச்சினுக்கு நிகராக:
ஆனால் அவர்களுக்கும் சேர்த்து அபாரமாக விளையாடிய நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சதமடித்து 118 ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய இளம் வீரர் ரச்சின் ரவீந்ரா தன்னுடைய முதல் சதத்தை அடித்து அதை அப்படியே இரட்டை சதமாக மாற்றி அதிகபட்சமாக 240 ரன்கள் குவித்து நியூசிலாந்துக்கு வலுவான துவக்கத்தை கொடுத்தார்.

மறுபுறம் சுமாராக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் நெய்ல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா எதிர்பார்த்ததை போலவே நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் வெறும் 162 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 45, டேவிட் பேடிங்கம் 32 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 3, மாட் ஹென்றி 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 349 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய நியூசிலாந்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் 179/4 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு டாம் லாதம் 3, டேவோன் கான்வே 29, ரச்சின் ரவீந்திரா 12 ரன்களில் அவுட்டானாலும் நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் மீண்டும் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்து 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: 4 டக், 4 ஒற்றை இலக்கம்.. 53 வருட வரலாறு காணாத வேகத்தில் வெ.இ அணியை ஓடவிட்ட ஆஸ்திரேலியா

களத்தில் டார்ல் மிட்சேல் 11*, டாம் பிளன்டல் 5* ரன்களுடன் உள்ள நியூசிலாந்து தற்போதைய நிலைமையில் 528 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 99% உறுதியாகியுள்ளது. மேலும் இந்த போட்டியையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் கேன் வில்லியம்சன் 6 சதங்கள் அடித்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 170 இன்னிங்ஸ்களுக்கு பின் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. கேன் வில்லியம்சன் : 31*
2. சச்சின் டெண்டுல்கர் : 31
3. ஸ்டீவ் ஸ்மித் : 31

Advertisement