4 டக், 4 ஒற்றை இலக்கம்.. 53 வருட வரலாறு காணாத வேகத்தில் வெ.இ அணியை ஓடவிட்ட ஆஸ்திரேலியா

AUS vs WI 3
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1* என்ற கணக்கில் சமன் செய்தது. இருப்பினும் அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த ஆஸ்திரேலியா அதற்கு பதிலடி கொடுத்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.

அந்த நிலையில் அத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி கான்பெரா நகரில் பெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 24.1 ஓவரில் வெறும் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

வரலாறு காணாத வேகம்:
அந்த அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் 4, கஜுரன் ஓட்லே 8, செஃபார்ட் 1, அல்சாரி ஜோசப் 6 என 4 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக டெடி பிஷப், மேத்தியூ போர்ட்ஜ், குடகேஷ் மோட்டி, ஓசினோ தாமஸ் ஆகிய 4 வீரர்கள் 0 ரன்களை தாண்டவில்லை. எஞ்சிய பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 32 ரன்கள் எடுத்தார்.

அந்தளவுக்கு பந்து வீச்சில் தெறிக்க விட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக சேவியர் பார்ட்லி 4 லான்ஸ் மோரிஸ், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 87 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு பிரெசர்-மெக்குர்க் அதிரடியாக 41 (18), ஜோஸ் இங்லிஷ் 35* (16) ரன்கள் விளாசினர். அதனால் வெறும் 6.5 ஓவரிலேயே 87/2 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

- Advertisement -

அந்த வகையில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இந்த தொடரில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸை தெறிக்க விட்டு 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மேலும் ஆஸ்திரேலியாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்த போட்டி மொத்தமாகவே வெறும் 186 பந்துகளில் முடிந்தது.

இதையும் படிங்க: இருந்த ஒருத்தரும் அவுட்டா? 3 ஆவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்படவுள்ள இந்திய வீரர் – பி.சி.சி.ஐ முடிவு

இதன் வாயிலாக 53 வருட வரலாற்றை கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிவேகமாக நடைபெற்று முடிந்த போட்டியாக இப்போட்டி சாதனை படைத்தது. இதற்கு முன் 2013இல் பெர்த் நகரில் இதே வெஸ்ட் இண்டீஸை 199 பந்துகளில் தோற்கடித்து ஆஸ்திரேலியா வென்றதே முந்தைய அதிவேகத்தில் முடிந்த போட்டியாகும். மறுபுறம் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அல்சாரி ஜோசப், ஓசினோ தாமஸ் தலா 1 விக்கெட் எடுத்தும் ஆறுதல் வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியவில்லை.

Advertisement