6 வயது ரசிகருக்காக ரிஷப் பண்ட் செய்த செயல். ஆசையை நிறைவேற்றி – அவரே பகிர்ந்த பதிவு

Ayan
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதன் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர் காயங்கள் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப ஒரு ஆண்டு ஆகும் என்று கூறப்பட்டது. அதேபோன்று அண்மையில் ரிஷப் பண்ட் ஒரு கோலின் உதவியுடன் வாக்கிங் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இயக்குனரான சவுரவ் கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் : நான் ரிஷப் பண்ட்டிடம் இரண்டு முறை பேசினேன். அவரது காயங்களுக்காக செய்து கொண்ட அறுவை சிகிச்சையினால் தற்போது கடினமான காலத்தை கடந்து வருகிறார். அவர் குணமடைய வாழ்த்துகிறேன் இந்திய அணிக்கு அவர் மீண்டும் திரும்ப இரண்டு வருடங்கள் கூட ஆகலாம் என்பதனால் இந்த ஐபிஎல் தொடரை அவர் தவறவிடுகிறார்.

- Advertisement -

அதுதவிர எதிர்வரும் ஐம்பது ஓவர் உலகக் கோப்பை, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கூட அவர் தவற விட வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார். 25 வயதான ரிஷப் பண்ட் இப்படி தனது கரியரின் சிறப்பான ஃபார்மில் இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு நிலையை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர் முயன்றளவு தனது காயத்திலிருந்து விடுபட்டு முழு உடற்தகுதியுடன் மீண்டு வர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்த கடினமான சூழ்நிலையில் கூட அவர் தனது 6 வயது ரசிகரின் ஆசையை நிறைவேற்றி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிஷப் பண்டின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்த அயான் என்கிற சிறுவனின் தந்தை :

- Advertisement -

என்னுடைய மகன் உங்களுடைய பரம ரசிகன். உங்களைப் போன்றே இடதுகை பேட்ஸ்மேன் தான். மேலும் எதிர்காலத்தில் உங்களைப் போன்ற கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்று விரும்புகிறார். அதுமட்டுமின்றி நீங்கள் குணம் அடைய வேண்டும் என டிசம்பர் 30-ம் தேதி முதல் பிரார்த்தனை செய்து வருகிறார். இன்று அவனுக்கு ஆறாவது பிறந்தநாள் உங்களால் அவனுக்கு வாழ்த்து சொல்ல முடியுமா? என்று ட்விட்டரில் கேட்டுக் கொண்டிருந்தார். அதேபோன்று தனது மகன் விளையாடும் வீடியோவையும் அவர் பகிர்ந்து இருந்தார்.

இதையும் படிங்க : IND vs AUS : 3வது போட்டி நடைபெறும் இந்தூர் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இந்நிலையில் அந்த பதிவினை கண்ட ரிஷப் பண்ட் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் அயன் “, “இந்த வருடம் உனக்கு சிறப்பாக அமையட்டும்” என்று அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த சிறுவனை வாழ்த்தி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement