தோனியின் மிகப்பெரிய சாதனையை அசால்டாக முறியடிக்கப்போகும் ரிஷப் பண்ட் – இவரா இப்படி?

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். தோனியின் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் கீப்பராக செயல்பட்டு வரும் பண்ட் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இடையில் சற்று தனது ஃபார்மில் ஏற்பட்ட சறுக்கல் மூலம் வாய்ப்பை இழந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது முன்னணி வீரராக வளர்ந்து நிற்கிறார்.

pant 4

- Advertisement -

இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது தோனியின் மிகப்பெரிய சாதனையை ஒன்றினை முறியடிக்க ரிஷப் பண்ட் காத்திருக்கிறார். அந்த சாதனை யாதெனில் இதுவரை இந்திய விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை தோனி வைத்திருந்தார்.

தோனி தனது 36வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது 100 பேரை ஆட்டமிழக்க காரணமாக அமைந்து இருந்தார். ஆனால் தற்போது இந்த சாதனையை எட்டிப்பிடிக்கஉள்ள ரிஷப் பண்ட் அதிவேகமாக இந்த சாதனையை செய்ய உள்ளார். அதாவது இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடியுள்ள பண்ட் 89 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங் என 97 வீரர்கள் ஆட்டமிழக்க காரணமாக அமைந்துள்ளார்.

pant 2

மேலும் எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் 3 விக்கெட்டுகள் விழ காரணமாக இருக்கும் பட்சத்தில் குறைந்த போட்டிகளில் அதாவது 26 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துவிடுவார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவிலும் ஓமைக்கிரான் பாதிப்பு ஏற்பட்டால் ஐ.பி.எல் எங்கு நடக்கும்? – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

இந்த சாதனை பட்டியலில் தோனி, விருத்திமான் சஹா, நயன் மோங்கியா போன்ற பல்வேறு சிறப்பான வீரர்களை பின்னுக்கு தள்ளி ரிஷப் பண்ட் இந்த சாதனையை படைக்க உள்ளது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement