இந்தியாவிலும் ஓமைக்கிரான் பாதிப்பு ஏற்பட்டால் ஐ.பி.எல் எங்கு நடக்கும்? – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

IPL-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக தற்போது புதிதாக இணைந்துள்ள இரு அணிகளை தவிர மீதமுள்ள 8 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள இரு அணிகளும் தாங்கள் நேரடியாக தேர்வு செய்யும் மூன்று வீரர்களின் பட்டியலை தயார் செய்து ரெடியாக வைத்துள்ள இவ்வேளையில் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு பின்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் உள்ள வீரர்களின் முழு பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

IPL
IPL Cup

அதனைத் தொடர்ந்து இந்த ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணையும் முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த தொடரானது நடைபெறும்போது ஓமைக்ரான் வைரஸின் பாதிப்பு இருந்தால் போட்டிகள் எங்கே நடைபெறும்? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் கடந்த இரு ஆண்டுகளாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக இந்தியாவில் நடத்தப்படவில்லை.

- Advertisement -

இவ்வேளையில் ஓமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் ஏற்படும் பட்சத்தில் இந்த தொடரானது எங்கு நடைபெறும் என்பது குறித்து தற்போது பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு நிச்சயம் இந்தியாவில் தான் தொடர் நடைபெற வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளதாகவும், அதேபோன்று போட்டிகள் அனைத்தும் எந்த ஒரு அணிக்கும் ஹோம் அட்வான்டேஜ் இல்லாமல் பொதுவான மைதானங்களில் நடத்தவும் இந்த ஆலோசனையில் அதிகமாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Dubai

மேலும் ஒருவேளை இந்தியாவில் ஐபிஎல் தொடர் தொடங்கும்போது ஓமைக்ரான் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் ஒட்டுமொத்த போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும் என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் போன நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : கங்குலி கிட்ட கேக்குறது நியாயமே இல்ல. கோலியின் பதவி நீக்கம் குறித்து பேச வேண்டியது யார்? – வெங்சர்க்கார் பேட்டி

இதன் காரணமாக வரும் ஐபிஎல் தொடரிலும் இந்தியாவில் நடத்த சிக்கல் இருக்கும் பட்சத்தில் ஐக்கிய அரபு அமீரகம் தான் முதல் சாய்ஸ்ஸாக இருக்கும் என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக நிர்வாகம் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement