கங்குலி கிட்ட கேக்குறது நியாயமே இல்ல. கோலியின் பதவி நீக்கம் குறித்து பேச வேண்டியது யார்? – வெங்சர்க்கார் பேட்டி

Dilip
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்க்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்படுவதாக விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அண்மையில் அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கான ஒருநாள் அணியில் இருந்து விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இது குறித்து பேசிய கங்குலி கூறுகையில் :

Kohli

- Advertisement -

விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகும் போதே நான் அவரை விலக வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதாக தரிவித்திருந்தார். மேலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனியே கேப்டன் நியமிப்பது சரியாக இருக்காது என்றும் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் இவரது கருத்துக்கு மாறாக தன்னிடம் கங்குலி அப்படி எந்த ஒரு வேண்டுகோளையும் வைக்கவில்லை என்று விராட் கோலி கூறினார்.

இதன் காரணமாக கேப்டன் பதவி நீக்கம் குறித்த விவகாரத்தில் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோரிடையே மோதல் இருப்பதாக செய்திகள் வெளியாகியது. மேலும் விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து கங்குலி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மற்றும் முன்னாள் வீரர் மதன் லால் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கூறுகையில் :

Ganguly 1

விராட் கோலியின் கேப்டன்சி நீக்கம் குறித்த விவகாரத்தில் கங்குலியின் பதில் சொல்ல எதுவுமே கிடையாது. வீரர்களின் மாற்றம் அல்லது கேப்டன்சி மாற்றம் என எதுவாக இருந்தாலும் தேர்வுக்குழு தலைவரை தான் கேட்க வேண்டும். ஏனெனில் தேர்வு குழுவில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் தான் இந்த முடிவினை எடுக்கிறார்கள். எனவே கங்குலியை கேட்பதைத் தவிர்த்து தேர்வுக் குழுவின் தலைவரை தான் கேப்டன்சி மாற்றம் குறித்து கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ தொடரில் அசத்தப்போகும் பவுலர் இவர்தான். அதுல சந்தேகமே இல்ல – ஜாஹீர் கான் ஓபன்டாக்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : விராட் கோலி மரியாதைக்குரிய ஒரு நபர். இந்திய கிரிக்கெட் அணிக்காக அவர் எவ்வளவோ அர்ப்பணிப்பை வழங்கி பாடுபட்டிருக்கிறார், அவரை மதிக்க வேண்டும். ஆனால் சிறப்பாக செயல்பட்ட அவரை இந்திய அணி நிர்வாகத்தினர் காயப்படுத்தி விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement