பிட்சை பாத்து தப்பா கணக்கு போட்டுட்டேன்.. நான் பண்ண தப்பு தான் தோல்விக்கு காரணம் – ஒப்புக்கொண்ட ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடி சன் ரைசர்ஸ் அணியானது டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களையும், அபிஷேக்சர்மா 46 ரன்களையும், சபாஷ் அகமது 59 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணியானது 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : இந்த போட்டியில் டாசின் போது டியூ வரும் என்று கணித்தே நான் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தேன். ஆனால் டியூ வராதது எங்களது பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

டாஸின் போது நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அதேபோன்று சன்ரைசர்ஸ் அணியை 220 முதல் 230 ரன்களுக்குள் சுருட்டி இருந்தால் எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும் பவர்பிளேவின்போது அவர்கள் 125 ரன்கள் குவித்தனர். அதனை துரத்தி நாங்களும் ரன் குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே தொடர்ச்சியாக ரன்களை குவிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

இதையும் படிங்க : 465 ரன்ஸ் நொறுக்கப்பட்ட போட்டியில்.. வெறும் 4.8 எக்கனாமி.. மினி பும்ராவாக மிரட்டிய நடராஜன்.. அசத்தல் சாதனை

இந்த போட்டியில் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் ரன் ரேட்டை துரத்தி பிடிக்க முடியவில்லை. எங்கள் அணியில் பிரேசர் மெக்கர்க் மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் போன்ற வீரர் அணிக்கு நிச்சயம் தேவை. இந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இனிவரும் போட்டிகளில் அதனை முன்னேற்றி வெற்றி பாதைக்கு திரும்புவோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement