465 ரன்ஸ் நொறுக்கப்பட்ட போட்டியில்.. வெறும் 4.8 எக்கனாமி.. மினி பும்ராவாக மிரட்டிய நடராஜன்.. அசத்தல் சாதனை

Natarajan 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற 35வது லீக் போட்டியில் டெல்லியை 67 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தியது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 266/7 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89, அபிஷேக் சர்மா 46, சபாஷ் அஹ்மத் 59* ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 267 ரன்களை துரத்திய டெல்லிக்கு ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் 65, அபிஷேக் போரேல் 42, கேப்டன் ரிஷப் பண்ட் 44 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் பிரித்திவி ஷா, டேவிட் வார்னர் உள்ளிட்ட இதிர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் 19.1 ஓவரில் டெல்லியை 199 ரன்களுக்கு சுருட்டிய ஹைதராபாத் சார்பில் நடராஜன் 4, மயங்க் மார்க்கண்டே 2, நிதிஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

மினி பும்ரா:
இந்த வெற்றிக்கு 89 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய தமிழக வீரர் நடராஜனும் இந்தப் போட்டியில் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார் என்றே சொல்லலாம். ஏனெனில் பேட்டிங்க்கு சாதகமாக ஃபிளாட்டாக இருந்த பிட்ச்சில் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட மற்ற பவுலர்கள் அனைவரும் 8க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வழங்கினார்கள்.

அதனால் இரு அணி பேட்ஸ்மேன்களும் சேர்ந்து இந்தப்போட்டியில் மொத்தம் 465 ரன்கள் அடித்தனர். அந்தளவுக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருந்த டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் மிகவும் அபாரமாக செயல்பட்ட நடராஜன் 1 மெய்டன் ஓவர் உட்பட 19 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து 4.8 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்து வீசினார்.

- Advertisement -

குறிப்பாக 19வது ஓவரில் 1 ரன் கூட கொடுக்காமல் அக்சர் படேல், அன்றிச் நோர்ட்ஜெ, குல்தீப் ஆகிய 3 வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்த அவர் டெத் ஓவர்களில் டெல்லியை அதிரடியாக விளையாட முடியாமல் கட்டுப்படுத்தினார். அந்த வகையில் இப்போட்டியில் மினி பும்ராவை போல செயல்பட்ட நடராஜன் மீண்டும் தம்முடைய தரத்தை நிரூபித்து தமிழக ரசிகர்களை பெருமையடைய வைத்தார்.

இதையும் படிங்க: நடராஜன் மேட்ச் வின்னர்.. அதை சைலன்ட்டா செஞ்சுடுவாரு.. நாங்க இல்லாம ஜெயிக்க முடியாது.. புவி பாராட்டு

மேலும் இந்த போட்டியில் 19 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஐபிஎல் தொடரில் தன்னுடைய சிறந்த பவுலிங்கை பதிவு செய்து சொந்த சாதனையை படைத்தார். இதற்கு முன் 2022 சீசனில் பெங்களூரு அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போட்டியில் 10 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்ததே நடராஜனின் முந்தைய சிறந்த பந்து வீச்சாகும்.

Advertisement