நடராஜன் மேட்ச் வின்னர்.. அதை சைலன்ட்டா செஞ்சுடுவாரு.. நாங்க இல்லாம ஜெயிக்க முடியாது.. புவி பாராட்டு

Bhuvneshwar Kumar
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற 35வது லீக் போட்டியில் டெல்லியை 67 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. டெல்லியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி 266/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89, அபிஷேக் சர்மா 46, சபாஷ் அஹ்மத் 59* ரன்கள் எடுத்தனர்.

டெல்லி சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 267 ரன்களை துரத்திய டெல்லிக்கு பிரிதிவி ஷா 16, டேவிட் வார்னர் 1, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 10, அக்சர் படேல் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஜேக் பிரேசர்-மெக்குர்க் 65, அபிஷேக் போரேல் 42, கேப்டன் ரிஷப் பண்ட் 44 ரன்கள் எடுத்தும் 19.1 ஓவரில் டெல்லியை 199 ரன்களுக்கு சுருட்டி ஹைதராபாத் எளிதாக வென்றது.

- Advertisement -

பாராட்டிய புவி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 19 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இந்நிலையில் எப்போதுமே தன்னுடைய யார்க்கர் பந்துகளால் அமைதிyaaga செயல்படும் நடராஜன் ஹைதராபாத் அணியின் ஒரு மேட்ச் வின்னர் என்று புவனேஸ்வர் குமார் பாராட்டியுள்ளார்.

அத்துடன் என்னதான் இப்படி பேட்ஸ்மேன்கள் காட்டுத்தனமாக அடித்தாலும் தங்களைப் போன்ற பவுலர்கள் இல்லாமல் எந்த ஒரு கோப்பையையும் வெல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இப்படி பெரிய இலக்கை கட்டுப்படுத்தும் போது நாங்கள் அதிக ரன்களை வழங்குவோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். நாங்கள் எங்களுடைய திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறோம். அதனால் கொஞ்ச நேரத்தில் விக்கெட்டுகள் எடுக்க துவங்கியதும் போட்டி சரியான வழியில் செல்ல துவங்கும்”

- Advertisement -

“நடராஜன் தன்னுடைய யார்கர்களால் எந்தளவுக்கு சிறப்பானவர் என்பதை நாங்கள் அறிவோம். கடினமாக உழைக்கக்கூடிய அவர் அமைதியான பையன். அவர் உண்மையான மேட்ச் வின்னர். பல வருடங்களுக்குப் பின் எங்களுடைய அணியின் பேட்டிங் இந்த வருடம் க்ளிக் ஆகியுள்ளது. அதனால் பவுலர்கள் நாங்கள் கொஞ்சம் அடி வாங்குவதற்கு மகிழ்ச்சியடைகிறோம்”

“ஆனால் பேட்டிங் நன்றாக வேலை செய்கிறது. வலைப்பயிற்சியில் எங்களுடைய பந்துகள் எங்கே பறக்கிறது என்பது தெரியாது. இருப்பினும் ஹெட் – அபிஷேக்கிற்கு எதிராக பந்து வீசுவது நல்ல பயிற்சியாகும். இப்போதும் பவுலிங் தான் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்கும். “பேட்டிங் உங்களுக்கு ஸ்பான்சர்ஷிப்பை வென்று கொடுக்கும். ஆனால் பவுலிங் தான் உங்களுக்கு சாம்பியன்ஷிப்பை வென்று கொடுக்கும்” என்று யார் சொன்னார்கள் என்று தெரியாது. ஆனால் அவர்கள் சொன்னது அற்புதமானது” என்று கூறினார்.

Advertisement