எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலையே இல்ல. டீம் தான் முக்கியம் – ரிஷப் பண்ட் அதிரடி

Rishabh Pant
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கடந்து டிசம்பர் 22-ஆம் தேதி டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 314 ரன்களை குவித்தது.

IND-vs-BAN

- Advertisement -

இந்த முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 93 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களையும் குவித்தனர். பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணியானது 231 ரன்கள் எடுக்கவே தற்போது இந்திய அணியானது 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வழக்கம்போலவே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 93 ரன்களில் ஆட்டமிழந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6 சதத்தை அடிக்கும் வாய்ப்பினை இழந்தார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த முறையோடு சேர்த்து மொத்தம் 6 முறை அவர் 90 ரன்களை கடந்து ஆட்டமிழந்துள்ளார்.

Rishabh-Pant

இந்நிலையில் தான் சதம் அடிக்காதது வருத்தம் அளிக்கவில்லை என்று ரிஷப் பண்ட் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் என்னால் சதம் அடிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கவில்லை. சதம் அடித்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால் இப்படி ஆட்டமிழந்தது குறித்து எனக்கு வருத்தமில்லை.

- Advertisement -

ஏனெனில் போட்டியின் சூழலுக்கு ஏற்றவாறு நான் விளையாடியதாக நினைக்கிறன். அந்தவகையில் இந்திய அணிக்கு நான் எனது பங்களிப்பை வழங்கியதில் மகிழ்ச்சி.சதம் அடிக்காதது குறித்து நான் வருத்தமும் படமாட்டேன். எனது பேட்டிங் இந்த போட்டியில் நன்றாக இருந்ததாகவே உணர்கிறேன்.

இதையும் படிங்க : பென் ஸ்டோக்ஸ் அடுத்த கேப்டனா? மவுனம் களைத்த சி.எஸ்.கே அணியின் – CEO சொன்னது என்ன?

மேலும் இந்த போட்டியின் முதலாவது இன்னிங்சில் என்னுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயரும் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டதாக ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement