பென் ஸ்டோக்ஸ் அடுத்த கேப்டனா? மவுனம் களைத்த சி.எஸ்.கே அணியின் – CEO சொன்னது என்ன?

Kasi
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐ.பி.எல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு 2023-க்கான 16 ஆவது ஐ.பி.எல் தொடரானது எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது நேற்று டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் 10 அணிகளும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டி போட்டு தேர்வு செய்தன.

Auction

- Advertisement -

இப்படி பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் எப்பொழுதுமே கடைசி நேரத்தில் ஏலத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் சி.எஸ்.கே அணியானது இம்முறை முன்னதாகவே சாம் கரனை ஏலத்தில் தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டியது. ஆனால் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பைக்கு பிறகு அவரது மதிப்பு உயரவே அவரது ஏலத்தின் மதிப்பும் கூடியது.

இதனால் எவ்வளவு முயன்றும் சி.எஸ்.கே அணியால் சாம் கரனை ஏலத்தில் வாங்க முடியவில்லை. இறுதியில் சாம் கரன் 19.50 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஜேசன் ஹோல்டரையும் சி.எஸ்.கே அணி வாங்க முற்பட்டு அதிலும் தோல்வியை சந்தித்தது.

Ben-Stokes

ஆனால் இறுதியில் விடாப்பிடியாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டாக்ஸை 16.25 கோடிக்கு சி.எஸ்.கே அணி ஏலத்தில் விலைக்கு வாங்கியது. இப்படி ஒரு சிறப்பான ஆல்ரவுண்டரை சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர். அதோடு மட்டுமின்றி அவரை சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசிய சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் :

- Advertisement -

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டாக்ஸை நாங்கள் ஏலத்தில் எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது நமது அணிக்கு ஒரு நல்ல ஆல்ரவுண்டர் தேவை. அந்தவகையில் நமது அணிக்கு ஸ்டோக்ஸ் கிடைத்ததில் மகிழ்ச்சி. தோனியும் இதற்காக மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஸ்டோக்ஸ் நமது அணிக்கு வந்ததும் பெரும்பாலானோர் அவர்தான் அடுத்த கேப்டன் என்று பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : ஏலத்தில் அசத்தி 5வது கோப்பையை வெல்ல தயாரான சிஎஸ்கே படை – புதிய அணி வீரர்களின் மொத்த விவரம்

ஆனால் கேப்டன்சி ஆப்ஷன் என்பது தல தோனியின் கையில் தான் உள்ளது. அவர் எடுக்கும் முடிவுகளில் அடிப்படையில் தான் நமது அணியின் அடுத்த நகர்வு இருக்கும். நிச்சயம் இந்த ஆண்டும் நமது அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என்று காசி விசுவநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement