ஐபிஎல் 2023 : ஏலத்தில் அசத்தி 5வது கோப்பையை வெல்ல தயாரான சிஎஸ்கே படை – புதிய அணி வீரர்களின் மொத்த விவரம்

CSK-1
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் கோலாகலமாக நடைபெறுகிறது. அதற்காக கொச்சியில் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் காலியாக இருந்த 87 இடங்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 405 கிரிக்கெட் வீரர்கள் போட்டி போட்டனர். அதில் தேவையான வீரர்களை வாங்குவதற்கு களமிறங்கிய 10 அணிகளில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுக்காக விளையாடிய ட்வயன் ப்ராவோ, ராபின் உத்தப்பா ஆகிய 2 தரமான ஓய்வு பெற்ற வீரர்களுக்கு தகுதியான மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அதிலும் குறிப்பாக மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக வரலாற்று வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ட்வயன் ப்ராவோவுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை பைனலில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று இங்கிலாந்துக்கு 2வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய சாம் கரனை வாங்க அந்த அணி நிர்வாகம் போராடியது. ஆனால் அதிக கையிருப்பு தொகையை வைத்திருந்த பஞ்சாப் நிர்வாகம் விடாப்பிடியாக 18.50 கோடி கொடுத்து வாங்கியது.

- Advertisement -

புதிய வெற்றிப்படை:
அதனால் பின்னடைவை சந்தித்தாலும் அவரை விட 2019, 2022 ஆகிய உலகக் கோப்பைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தின் வெற்றி நாயகனாக கொண்டாடப்படும் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு சென்னை வெற்றிகரமாக வாங்கியது அனைவரது பாராட்டுகளை பெற்றது. மேலும் உத்தப்பாவுக்கு பதில் அனுபவம் வாய்ந்த ரகானேவே 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு வளைத்து போட்ட சென்னை நிர்வாகம் நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கெய்ல் ஜமிஷனை வெறும் 1 கோடி என்ற அடிப்படை விலையில் வாங்கி மேலும் அசத்தியது.

அது போக சில இளம் வீரர்களை குறைந்த விலையில் வாங்கிய அந்த அணி நிர்வாகம் இந்த வருடம் தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத நிலையில் அடுத்த வருடம் புதிய புதிய அணியுடன் களமிறங்கி 5வது கோப்பையை வெல்ல போராடவுள்ளது. மேலும் அடுத்த வருடத்துடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஏற்கனவே இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டனாக அசத்தும் பென் ஸ்டோக்ஸ் சென்னையின் அடுத்த கேப்டனாக வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஏலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி புதிதாக வாங்கிய வீரர்களின் பட்டியல்: அஜிங்க்ய ரகானே (50 லட்சம்), பென் ஸ்டோக்ஸ் (16.25 கோடி), ஷைக் ரஷீத் (20 லட்சம்), நிஷாந்த் சிந்து (60 லட்சம்), கைலை கெய்ல் ஜேமிசன் (1 கோடி), அஜய் மண்டல் (10 லட்சம்), பகத் வர்மா (20 லட்சம்)

இந்த ஏலத்தில் 20.45 கோடிகளுடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவர்களை வாங்குவதற்கு 19 கோடிகளை செலவிட்டது. அது போக இன்னும் அந்த அணியிடம் 1.5 கோடிகள் ஏலத்தொகை கையிருப்பு உள்ளது. மேலும் அந்த அணி அதிகபட்ச அளவான 25 வீரர்களையும் வாங்கி முடித்துள்ளது. அதில் 17 இந்தியர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள். முன்னதாக ஏற்கனவே தோனி தலைமையில் தக்க வைத்த வீரர்களுடன் புதிதாக வாங்கப்பட்ட வீரர்களையும் சேர்த்து 2023 ஐபிஎல் தொடரில் 5வது கோப்பையை வெல்ல களமிறங்க தயாராகியுள்ள புதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழுமையான பட்டியல் இதோ:

இதையும் படிங்க: எல்லா புகழும் ராகுலுக்கே, சுமார் வீரரை 16 கோடிக்கு கண்ணை மூடிக்கொண்டு வாங்கிய லக்னோ – கலாய்க்கும் ரசிகர்கள்

எம்எஸ் தோனி (கேப்டன்), டேவோன் கான்வே , ருதுராஜ் கைக்வாட், அம்பத்தி ராயுடு, சுபிரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் , ட்வைன் பிரிடோரிஸ், மிட்செல் சாண்ட்னெர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சஹர், பிரஷாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா, அஜிங்க்ய ரகானே, பென் ஸ்டோக்ஸ், ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கெய்ல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா

Advertisement