எல்லா புகழும் ராகுலுக்கே, சுமார் வீரரை 16 கோடிக்கு கண்ணை மூடிக்கொண்டு வாங்கிய லக்னோ – கலாய்க்கும் ரசிகர்கள்

KL Rahul LSG
- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் எல்லாம் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெற்றது. வெறும் 87 காலியிடங்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்ற அந்த ஏலத்தில் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் நிறைய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பெரிய தொகைக்கு விலை போனார்கள். குறிப்பாக 2022 டி20 உலக கோப்பையில் பைனலில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்று இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாம் கரண், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் முறையே 18.5, 16.25 கோடிக்கு பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்காக வாங்கப்பட்டார்கள்.

அப்படி தற்சமயத்தில் நல்ல பார்மில் இருப்பதால் பெரிய தொகைக்கு விலை போன ஆல் ரவுண்டர்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 16 கோடி என்ற பெரிய தொகைக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக வாங்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில் கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கணிசமான போட்டிகளில் அதிரடி சரவெடியாக செயல்பட்ட அவர் சமீப காலங்களில் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

எல்லா புகழும்:
இதுவரை 64 டி20 போட்டிகளில் 1427 ரன்களை 129.02 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறும் அளவுக்கு மோசமாக செயல்பட்டதால் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். அந்த வகையில் தற்சமயத்தில் சுமாரான பார்மில் இருக்கும் அவர் ஐபிஎல் தொடரில் 2019இல் முதல் முறையாக பஞ்சாப் அணிக்கு 4.20 கோடி ரூபாயில் வாங்கப்பட்டார். அதில் 6 போட்டிகளில் 168 ரன்கள் எடுத்த அவர் 2020 சீசனில் 14 போட்டிகளில் 358 ரன்கள் எடுத்து ஓரளவு சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால் 2021 சீசனில் விதவிதமாக டக் அவுட்டாகி 12 போட்டிகளில் வெறும் 85 ரன்களை 7.72 என்ற வரலாற்றில் வேறு எந்த பேட்ஸ்மேனும் காணாத அளவுக்கு மோசமான சராசரியில் எடுத்த அவரது செயல்பாடுகளை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். அதனால் பஞ்சாப் அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் இந்த வருடம் ஹைதராபாத் அணியில் 10.75 கோடி விலையில் 14 போட்டிகளில் 306 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் சுமாராகவே செயல்பட்டார்.

- Advertisement -

அதனாலேயே ஹைதராபாத் கழற்றி விட்ட அவரை இம்முறை எந்த அணியும் வாங்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இறுதியில் டெல்லியிடம் சண்டை போட்டு 16 என்ற மிகப்பெரிய தொகைக்கு சுமாரான பார்மில் இருக்கும் அவரை தேவையின்றி லக்னோ அணி நிர்வாகம் வாங்கியது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பேட்டிங்கில் கடந்த சீசன்களில் சுமாராக செயல்பட்டாலும் அடுத்த வருடம் சிறப்பாக செயல்படுவார் என்று ஒருபுறம் வைத்துக் கொள்வோம். ஆனால் ஏற்கனவே அந்த அணியில் கேஎல் ராகுல் மற்றும் குவின்டன் டீ காக் ஆகிய 2 முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள்.

அவர்கள் இருந்தும் 3வதாக ஒரு விக்கெட் கீப்பரை அதுவும் சுமாரான பார்மில் இருக்கும் ஒருவரை அதுவும் 16 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது உண்மையாகவே லக்னோ அணியின் சிறந்த திட்டம் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. இதை பார்க்கும் ரசிகர்கள் அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் ஏற்கனவே இந்தியாவுக்காக கனவில் அபாரமாக கேப்டன்ஷிப் செய்து சிறப்பாக செயல்பட்டு வரும் கேப்டன் கேஎல் ராகுல் சிபாரிசுடன் வாங்கியிருக்கலாம் என்று சமூகவலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்கசி.எஸ்.கே அணிக்காக தேர்வானதும் பென் ஸ்டோக்ஸ் கொடுத்த ரிப்ளை – உங்களுக்கும் இந்த கலர் பிடிக்குமா?

மேலும் தோனி தலைமையில் சுமாரான வீரர்கள் கூட அசத்துவார்கள் என்பது போல் ராகுல் தலைமையில் நிக்கோலஸ் பூரன் அசத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் லக்னோ அணியை கலாய்க்கிறார்கள். அத்துடன் தொடர்ந்து சுமாராக செயல்பட்டாலும் 4, 10, 16 கோடி என மதிப்பு ஏறும் உங்களுக்கு மச்சம் இருக்கிறது என்றும் ரசிகர்கள் நிகோலஸ் பூரனை கலக்கிறார்கள்.

Advertisement