சி.எஸ்.கே அணிக்காக தேர்வானதும் பென் ஸ்டோக்ஸ் கொடுத்த ரிப்ளை – உங்களுக்கும் இந்த கலர் பிடிக்குமா?

Ben-Stokes
Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 23-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் 16-வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் 900 மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த வேளையில் அதில் 400-க்கும் மேற்பட்ட வீரர்களை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் இறுதி செய்திருந்தது. இந்த மினி ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் விலைக்கு வாங்கினர்.

CSK-Auction

இதனால் எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை வாங்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணி எந்தெந்த வீரர்களை தேர்ந்தெடுக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் இந்த மினி ஏலத்தில் சென்னை அணி அதிக தொகை கொடுத்து இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்ஸை 16 கோடியே 25 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.

இப்படி பென் ஸ்டோக்ஸை அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்க காரணமே அவர் ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர் என்பது மட்டுமின்றி தோனிக்கு அடுத்து அவரால் கேப்டன்சி செய்ய முடியும் என்பதனாலே அவரை சென்னை அணி தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணிக்காக தான் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பென் ஸ்டோக்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் பென் ஸ்டோக்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் மஞ்சள் நிறத்தை மட்டும் வெளியிட்டு சென்னை அணிக்காக தான் விளையாட இருப்பதை உறுதி செய்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் எங்களுக்கு மஞ்சள் நிறம் தான் பிடிக்கும். உங்களுக்கும் அந்த நிறம் தான் பிடிக்குமா? என்பது போன்ற கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசனை ஏலத்தில் வாங்கிய அணி எது? – எவ்வளவு தொகை தெரியுமா?

மேலும் இந்த ஐபிஎல் தொடருக்காக சென்னை அணி தேர்வு செய்த பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு முக்கிய வீரராக செயல்படப்போவது மட்டுமின்றி வருங்காலத்தில் சி.எஸ்.கே அணியின் கேப்டனாகவும் மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement