தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசனை ஏலத்தில் வாங்கிய அணி எது? – எவ்வளவு தொகை தெரியுமா?

Jagadeesan
- Advertisement -

இந்தியாவில் அடுத்த 2023-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இன்று டிசம்பர் 23-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் 10 அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது அணிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலமானது ரசிகர்களுக்காக தொலைக்காட்சி மூலம் நேரலையும் செய்யப்பட்டது.

அந்த வகையில் இன்றைய ஏலத்தில் பல வீரர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போனாலும் குறிப்பிட்ட சில வீரர்கள் எந்த தொகைக்கு எந்த அணிக்காக செல்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரர் ஜெகதீசன் எந்த அணிக்கு செல்வார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு காணப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக கொண்டு ஆரம்பித்த ஜெகதீசனின் ஏலம் கோடிக்கணக்கில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் 90 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் வழங்கப்பட்டார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்களை அடித்தது மட்டுமின்றி அதிவேக இரட்டை சதத்தையும் அடித்து அசத்தியிருந்த ஜெகதீசன் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 90 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்.

- Advertisement -

சென்னை அணி ஜெகதீசனை வாங்க முற்பட்டாலும் கொல்கத்தா அணி விடாப்பிடியாக அவரை 90 லட்சத்திற்கு வாங்கியது. சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக ஜெகதீசன் 50 ஓவர் போட்டியில் தான் சிறப்பாக விளையாடுகிறார் என்றும் டி20 போட்டிகளில் சரிவர விளையாடவில்லை என்ற விமர்சனமும் இருந்து வந்தது.

இதையும் படிங்க : IND vs BAN : ஆல் ரவுண்டராக ஜாம்பவான் கபில் தேவை மிஞ்சிய அஷ்வின் – டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய அளவில் புதிய வரலாற்று சாதனை

ஆனால் கொல்கத்தா அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்றோர் ஐபிஎல் தொடரில் சாதித்து இந்திய அணியில் இடம் பிடித்த வேளையில் நிச்சயமாக தமிழக வீரர் ஜெகதீசன் இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement