IND vs ENG : இங்கிலாந்து அணிக்கெதிரான அதிரடியான சதம் குறித்து போட்டி முடிந்து – ரிஷப் பண்ட் சொன்னது என்ன?

Rishabh-Pant-Century
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நேற்று ஜூலை ஒன்றாம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை சிறப்பாக விளையாடி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்து நல்ல ரன் குவிப்புடன் முடித்துள்ளது. இந்த போட்டியில் துவக்கத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

pant 1

- Advertisement -

அப்போது களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் முதல் சில பந்துகளை நிதானமாக துவங்கினார். அவர் பேட்டிங் இறங்கிய பின்னரும் அடுத்தடுத்த விக்கெட்டுகள் ஒரு கட்டத்தில் சரியவே இந்திய அணி 100 ரன்களுக்குள் அதாவது 98 ரன்களில் இருந்தபோது 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பின்னர் ஜடேஜாவுடன் கூட்டணி அமைத்த ரிஷப் பண்ட் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 ஆவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

முதல் நாள் ஆட்டநேர இறுதியில் ஜடேஜா 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கும் வேளையில் ரிஷப் பண்ட் 111 பந்துகளை சந்தித்து 20 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 146 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறி இருந்தார். இந்த அதிரடியான சதத்தின் மூலம் ரிஷப் பண்ட் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இந்நிலையில் முதல்நாள் ஆட்டத்தில் அடித்த இந்த சதம் குறித்து நேற்றைய போட்டி முடிந்து ரிஷப் பண்ட் பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் :

Rishabh-Pant

இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு போட்டியிலுமே நான் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தே விளையாடுகிறேன். என்னுடைய சிறு வயதிலிருந்து நான் கிரிக்கெட்டை மிகவும் ஃபோகஸ் உடன் விளையாடி வருகிறேன். என்னுடைய சிறு வயது பயிற்சியாளர் எப்போதும் என்னிடம் கூறுவது ஒன்றுதான். உன்னால் பந்துகளை நன்றாக அடித்து ஆட முடிகிறது, அதே வேளையில் டிபன்ஸ் செய்யவும் கற்றுக்கொள் என்று கூறுவார்.

- Advertisement -

அந்த வகையில் நான் டிபன்ஸ் செய்ய தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் டிபன்ஸ் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் எல்லா பந்துகளையும் நம்மால் அடித்து விட முடியாது. எனவே டிபன்ஸ் செய்யவும் கற்றுக் கொண்டேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் மிகவும் அதிரடியாக விளையாட உதவுவது இரண்டு விடயங்கள்தான். ஒன்று என்னால் அதிரடியாக பந்தை அடித்தும் விளையாட முடியும். அதே வேளையில் பந்தை தடுத்தும் விளையாட முடியும். பந்துகளுக்கு ஏற்றார் போல் நான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்.

இதையும் படிங்க : IND vs ENG இந்திய விக்கெட் கீப்பர்களில் யாரும் படைக்காத சாதனையை படைத்த ரிஷப் பண்ட் – தோனியின் சாதனை உடைப்பு

இங்கிலாந்து போன்ற மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவும் கை கொடுக்கும் என்பதனால் ஒவ்வொரு பந்தையும் கணித்து விளையாட வேண்டியது அவசியம். அதேவேளையில் மனதளவில் நான் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடப் போகிறேன் என்று தயாராகிவிட்டால் அன்றைய நாளில் என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிவரும். அந்த வகையில் இன்றைய போட்டிக்கு முன்னரும் நான் நல்ல மனநிலையுடன் இருந்ததால் இந்த அதிரடியான சதம் வந்தது என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement