IND vs ENG இந்திய விக்கெட் கீப்பர்களில் யாரும் படைக்காத சாதனையை படைத்த ரிஷப் பண்ட் – தோனியின் சாதனை உடைப்பு

Rishabh-Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நேற்று ஜூலை ஒன்றாம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலாவதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தீர்மானம் செய்ய முதலில் விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 73 ஓவர்களில் விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி முதல் நாள் ஆட்டத்திலேயே 338 ரன்களை குவித்துள்ளதால் இன்று மேலும் ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணியை அழுத்தத்திற்குள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bumrah Captain

- Advertisement -

இந்நிலையில் இந்த முதல் இன்னிங்சின் போது இந்திய அணி முதல் நாளில் அதிரடியாக ரன்களை குவித்தாலும் துவக்கம் சரியாக இல்லை என்றே கூறலாம். ஏனெனில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் 17 ரன்களும், புஜாரா 13 ரன்களும், விகாரி 20 ரன்களும், விராட் கோலி 11 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதனை தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் 15 ரன்களில் வெளியேறியதால் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஆறாவது விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரது கூட்டணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜடேஜா 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வரும் வேளையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 111 பந்துகளை சந்தித்து 20 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 146 ரன்கள் குவித்து அதிரடியில் பின்னி எடுத்தார்.

pant 1

அவரது இந்த அபாரமான அதிரடி ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு தற்போது முதல் இன்னிங்சில் அழுத்தத்தை கொடுத்துள்ளது என்று கூறவேண்டும். இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக சதம் அடித்த ரிஷப் பண்ட் இந்திய விக்கெட் கீப்பர்களில் யாரும் செய்யாத ஒரு பிரமாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் சதங்களை விளாசிய நான்காவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் பெற்றார். இதற்கு முன்னதாக இந்திய அணிக்காக ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் சதங்களை விளாசியவர்களாக புத்தி குந்திரன், தோனி, சஹா ஆகியோர் அடித்துள்ளனர்.

- Advertisement -

அவர்களைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் தற்போது இந்த சாதனையை செய்துள்ளார். ஆனாலும் இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் : இந்த இரண்டு டெஸ்ட் சதங்களுமே அயல்நாட்டில் அடிக்கப்பட்டவை. ஒன்று தென் ஆப்பிரிக்காவிலும் தற்போது மற்றொன்று இங்கிலாந்திலும் அடிக்கப்பட்டவை. எனவே அயல்நாட்டு மண்ணில் ஒரே ஆண்டில் இரண்டு சதங்களை விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் கேப்டன்களாக செயல்பட்ட – டாப் 5 பவுலர்களின் பட்டியல்

அதோடு இதுவரை ஆசிய கண்டத்தை தாண்டி வெளியில் இந்திய விக்கெட் கீப்பர்கள் அனைவரும் சேர்ந்து மூன்று சதங்களை மட்டுமே விளாசி உள்ளனர். அதில் (விரிதிமான் சஹா, அஜய் ராத்ரா, விஜய் மஞ்சரேக்கர்) என மூன்று சதங்கள் மட்டுமே ஆசிய கண்டத்திற்கு வெளியே எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை தனி ஆளாக காலி செய்துள்ள ரிஷப் பண்ட் ஒற்றை ஆளாய் ஆசிய கண்டத்திற்கு வெளியே நான்கு சதங்களை அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement