டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் கேப்டன்களாக செயல்பட்ட – டாப் 5 பவுலர்களின் பட்டியல்

kapil
- Advertisement -

கிரிக்கெட்டில் ஒரு அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் சரியான முறையில் வழிநடத்தி நாட்டுக்காக சர்வதேச அரங்கில் வெற்றியை தேடிக் கொடுக்கும் கேப்டனை தேர்வு செய்வது அந்த அணி நிர்வாகத்தின் முக்கிய வேலையாகும். அது போன்ற பெரும்பாலான தருணங்களில் ஏற்கனவே தங்களது அபார திறமையால் உலகத்தரம் வாய்ந்த வீரராக நிரூபித்து வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்ற வீரர்களே கேப்டன்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிலும் அதிரடியான ரன்களைக் குவித்து சதங்களை அடித்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் பேட்ஸ்மேன்களே 99% தருணங்களில் பெரும்பாலான அணிகளுக்கு கேப்டன்களாக இருப்பார்கள். அதனாலேயே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களே கேப்டன்கள் என்ற எழுதப்படாத விதி உள்ளது எனலாம். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா போன்ற பேட்ஸ்மேன்களை அதிகம் விரும்பும் ரசிகர்களை கொண்ட நாட்டில் பவுலர்களை கேப்டனாக பார்ப்பதெல்லாம் அரிதினும் அரிதாகும்.

- Advertisement -

அதற்கு சில முக்கியமான காரணங்களும் உள்ளது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் எண்ணற்ற ஓவர்களை வீச வேண்டிய பவுலர்கள் அதிகமாக ஓடிஓடி உடலளவில் சற்று களைப்புடன் இருப்பார்கள் என்பதால் பரபரப்பாக நடக்கும் போட்டியின் மத்தியில் கேப்டன்ஷிப் முடிவுகளை புத்துணர்ச்சியுடன் எடுக்க முடியாது. மற்றொன்று அதே காரணத்தால் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் சற்று அதிகப்படியான காயங்களை சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

ஆனால் கேப்டனாக இருக்க வேண்டியவர் காயமின்றி அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதற்காகவே பேட்ஸ்மேன்கள் கேப்டன்களாக நியமிக்க படுவார்கள். அதையும் தாண்டி ஒரு பவுலர் கேப்டனாகிறார் என்பதால் அவர் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக தனது அபார திறமையால் நிறைய வெற்றிகளை பெற்று கொடுப்பவராகவும் நல்ல உடல் தகுதியுடன் நட்சத்திர அந்தஸ்தும் கொண்டவராகவும் இருப்பார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்திய பவுலர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. குலாம் அஹமட்: 1950களில் தரமான சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்த இவர் 1955 – 1958 ஆகிய காலகட்டத்தில் 3 போட்டிகளில் இந்தியாவை வழி நடத்தியுள்ளார். இருப்பினும் அவரது தலைமையில் அந்த காலத்து வெறித்தனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டியில் தோற்ற இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் டிரா செய்தது. ஒரு பவுலராக இந்தியாவுக்கு 22 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 68 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

2. பிஷன் சிங் பேடி: 70களில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த இவர் 67 போட்டிகளில் 266 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

- Advertisement -

அதனால் 1976 – 1978 காலகட்டத்தில் 22 போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளராக இந்தியாவை வழிநடத்திய இவரது தலைமையில் இந்திய 6 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. 11 தோல்விகளை சந்தித்த நிலையில் 5 போட்டிகள் டிராவில் முடிந்தன.

3. சீனிவாஷ் வெங்கடராகவன்: 1965 – 1983 வரை இந்திய அணியில் அப்போதைய மெட்ராஸ் எனப்படும் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வந்த இவர் 57 டெஸ்ட் போட்டிகளில் 157 விக்கெட்களை எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

- Advertisement -

அதிலும் 1974 – 1979 வரையிலான காலகட்டத்தில் 5 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட இவரது தலைமையில் 2 வெற்றிகளை சந்தித்த இந்தியா 3 தோல்விகளைச் சந்தித்தது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. அதன்பின் 90களில் இவர் பிரபலமான நடுவராக செயல்பட்டதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

3. கபில் தேவ்: பவுலர் என்று சொல்ல முடியாத அளவுக்கு அபாரமான பேட்டிங் அற்புதமான பவுலிங் சிறப்பாக பில்டிங் செய்யும் திறமை பெற்ற பீல்டர் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த மகத்தான கேப்டன் என பல பரிணாமங்களை கொண்ட ஜாம்பவான் கபில்தேவ் இன்று இந்தியாவில் கிரிக்கெட் எனும் விளையாட்டு ஆலமரமாய் நிற்பதற்கு முக்கிய காரணமாவார்.

இந்த பட்டியலில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக முதல் முறையாக இந்தியாவை வழி நடத்திய மகத்தான பெருமைக்கு சொந்தக்காரரான இவரது தலைமையில் 34 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. 7 போட்டிகளில் தோற்றாலும் 22 போட்டிகளை டிரா செய்தது.

4. அனில் கும்ப்ளே: டெஸ்ட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராக வரலாற்றுச் சாதனை படைத்த இவர் 2007இல் சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் என 2 ஜாம்பவான்கள் அடுத்தடுத்த வருடங்களில் கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது இந்தியாவின் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

2007 – 2008 காலகட்டத்தில் இவரது தலைமையில் 14 போட்டிகளில் விளையாடிய இந்தியா 3 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. அதனால் 2007இல் டி20 உலகக் கோப்பையை வென்று நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த எம்எஸ் தோனிக்கு வழிவிடும் வகையில் இவர் ஓய்வு பெற்றார்.

5. ஜஸ்பிரித் பும்ரா: தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதால் துணை கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018இல் அறிமுகமாகி தனது அபார திறமையால் இன்று 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ள இவர் கேப்டனாகும் அளவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக அபார வளர்ச்சி கண்டுள்ளார். இந்தியாவின் 36-ஆவது கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அவர் 36 வருடங்கள் கழித்து கபில் தேவுக்கு பின் இந்தியாவை வழிநடத்தும் 2-வது வேகப்பந்து வீச்சாளராக பெருமை பெற்றுள்ளார். இந்த பெருமையை வெற்றியாக மாற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement