IND vs ENG : விமர்சனங்களுக்கு ஸ்டைலாக முற்றுப்புள்ளி வைத்த ரிஷப் பண்ட் – தோனியை மிஞ்சி படைத்த சாதனைகள் இதோ

Rishabh Pant IND vs ENG Rohit Sharma
- Advertisement -

மான்செஸ்டரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி ஜூலை 17ஆம் தேதியான நேற்று துவங்கியது. ஓவல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவுக்கு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Hardik Pandya 1

- Advertisement -

முகம்மது சிராஜ் வீசிய 2-வது ஓவரிலேயே ஜானி பேர்ஸ்டோ ஜோ ரூட் ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க மறுபுறம் அதிரடி காட்டிய ஜேசன் ராயை 41 (31) ரன்களில் காலி செய்த ஹர்திக் பாண்டியா பென் ஸ்டோக்சை 27 (29) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் 74/4 என மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்து 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் பட்லருடன் 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய மொயின் அலி 34 (44) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 27 (31) ரன்களில் நடையை கட்டினார்.

சறுக்கிய இந்தியா:
அந்த நிலைமையில் போராடிக் கொண்டிருந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 60 (80) ரன்களில் அவுட்டாக கடைசியில் டேவிட் வில்லி 18 (15) ரன்களும் கிரேக் ஓவர்டன் 32 (33) ரன்களும் எடுத்து ஓரளவு மானத்தைக் காப்பாற்றினார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 1 (3) ரோஹித் சர்மா 17 (17) என தொடக்க வீரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் 17 (22) ரன்களில் அவுட்டாகி கைவிட்டார். போதாகுறைக்கு காப்பாற்றுவார் என கருதப்பட்ட சூரியகுமார் யாதவும் 16 (28) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

Rishabh Pant and Hardik Pandya

அதனால் 72/4 என ஆரம்பத்திலேயே சறுக்கிய இந்தியாவின் தோல்வி உறுதியென்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது பொறுப்பை காட்டிய ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் 17-வது ஓவரிலிருந்து 36-ஆவது ஓவர் வரை நங்கூரமாய் பேட்டிங் செய்து 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். அதில் 10 பவுண்டரியுடன் 71 (55) ரன்களில் வெற்றியை உறுதி செய்து பாண்டியா ஆட்டமிழக்க மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் சதமடித்து மிரட்டினார்.

- Advertisement -

விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி:
கடைசியில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட போது டேவிட் வில்லி வீசிய 42-வது ஓவரில் 4, 4, 4, 4, 4, 1, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்கவிட்டு 16 பவுண்டரி 2 சிக்சருடன் 125* (113) ரன்கள் விளாசி இந்தியாவை 261/5 (42.1) ரன்களை எட்ட வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்ற இந்தியா இங்கிலாந்து மீண்டும் அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து அசத்தியது.

Rishabh Pant 1

முன்னதாக கடந்த 2018இல் அறிமுகமாகி டெஸ்ட் கிரிக்கெட்டில் சரவெடியாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையை படைத்து தனக்கென்று நிலையான இடத்தையும் முத்திரையையும் பதித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அதிரடி காட்ட வேண்டிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தடுமாறும் அவர் கடந்த 4 வருடங்களில் மனதில் நிற்கும் அளவுக்கு ஒரு போட்டியில் கூட சிறப்பாக செயல்படாமல் சொதப்பியதால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற வகையில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் இப்போட்டியில் அபார வெற்றியைப் பெற்றுக்கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு தனக்கே உரித்தான ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்து தம்மால் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.

Rishabh Pant

அபார சாதனைகள்:
முன்னதாக இப்போட்டியில் 125 ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற கேஎல் ராகுல் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரிஷப் பண்ட் : 125*, மான்செஸ்டர், 2022*
2. கேஎல் ராகுல் : 112, மௌன்ட் மௌங்கனி, 2020
3. எம்எஸ் தோனி : 101*, மிர்பூர், 2010

- Advertisement -

2. மேலும் ராகுல் டிராவிட், கேஎல் ராகுல் ஆகியோருக்குப் பின் ஆசியக் கண்டத்திற்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்த 3-வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் பெற்றார்.

இதையும் படிங்க: IND vs ENG : முகமது ஹபீஸ்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 2ஆவது நபராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ஹார்டிக் பாண்டியா

3. அதைவிட டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.

4. அத்துடன் ஆசியக் கண்டத்திற்கு வெளியே நடந்த ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாக சேசிங் செய்யும் போது அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியை முந்தி புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரிஷப் பண்ட் : 125*, மான்செஸ்டர், 2022
2. எம்எஸ் தோனி : 87*, மெல்போர்ன், 2018
3. எம்எஸ் தோனி : 85, ஆக்லாந்து, 2015

Advertisement