IND vs ENG : முகமது ஹபீஸ்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 2ஆவது நபராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ஹார்டிக் பாண்டியா

Mohammed Hafeez Hardik Pandya
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இங்கிலாந்து தக்க பதிலடி கொடுத்த தொடரை சமன் செய்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டி ஜூலை 17-ஆம் தேதியான நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துக்கு ஜானி பேர்ஸ்டோ ஜோ ரூட் ஆகிய பேட்ஸ்மேன்கள் முகமது சிராஜ் வீசிய ஓவரில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அந்த நிலைமையில் அதிரடி காட்ட முயன்ற ஜேசன் ராயை 41 (43) ரன்களில் அவுட் செய்த ஹர்திக் பாண்டியா முக்கிய வீரர் பென் ஸ்டோக்சை 27 (29) ரன்களில் அவுட் செய்து இந்தியாவை முன்னிலைப் படுத்தினார். அதனால் 74/4 என தடுமாறிய இங்கிலாந்தை கேப்டன் பட்லருடன் 5-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயன்ற மொயீன் அலி 34 (44) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக களமிறங்கிய லிவிங்ஸ்டன் 27 (31) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

திணறிய இந்தியா:
அந்த நிலைமையில் கேப்டன் பட்லரும் 60 (80) ரன்களில் அவுட்டான நிலையில் கடைசியில் டேவிட் வில்லி 18 ரன்களும் ஓவர்டன் 32 ரன்கள் எடுத்த போதிலும் 45.5 ஓவர்களில் ஆல் அவுட்டான அந்த அணி 259 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 1 (3) ரோகித் சர்மா 17 (17) என தொடக்க வீரர்களில் ஏமாற்ற விராட் கோலியும் 17 ரன்களில் நடையை கட்டியனார். அதனால் 38/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை காப்பாற்ற முயன்ற சூரியகுமார் யாதவும் 17 (22) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் 72/4 என தடுமாறிய இந்தியாவின் தோல்வி உறுதியென ரசிகர்கள் கவலைப்பட்ட போது 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா ரிஷப் பண்ட் ஆகியோர் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் பேட்டிங் செய்து 133 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவைக் காப்பாற்றினர். இதில் 10 பவுண்டரியுடன் 71 (55) ரன்கள் எடுத்திருந்த பாண்டியா முக்கிய நேரத்தில் ஆட்டமிழக்க மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த ரிசப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து 16 பவுண்டரி 2 சிக்சருடன் 125* (114) ரன்களை தெறிக்கவிட்டு அபார பினிஷிங் கொடுத்தார்.

பழைய பண்டியா:
அதனால் 42.1 ஓவரிலேயே 261/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று மாஸ் காட்டியது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் முக்கியமான 71 ரன்களும் எடுத்து அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்ட பாண்டியாவுக்கு தொடர் நாயகன் விருது சமர்ப்பணம் செய்யப்பட்டது. ஏனெனில் இந்த தொடரில் 100 ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் எடுத்து அவர் தொடர் முழுவதும் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக அசத்தினார்.

- Advertisement -

கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக அசத்திய அவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஊட்டினார். ஆனால் 2019 உலகக் கோப்பைக்கு பின்பு அடைந்த காயத்தால் பந்து வீச முடியாமல் தவித்த அவர் 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்காக மனம் தளராத அவர் ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் கம்பேக் கொடுத்து தற்போது பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் அபாரமாக செயல்படும் அதே பழைய பாண்டியாவாக மாறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சூப்பர் சாதனை:
முன்னதாக இப்போட்டியில் 4 விக்கெட்டுகள் 71 ரன்கள் எடுத்த அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் நடந்த ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் ஸ்ரீகாந்த் (1988), சச்சின் (1998), கங்குலி (1999 & 2000), யுவராஜ் (2008 & 2011) ஆகியோர் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களும் 4 விக்கெட்டுகளை எடுத்து உள்ளனர். ஆனால் பாண்டியா தான் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் எடுத்த மகத்தானவராக சாதித்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs ENG : இந்த ஒரு விஷயத்திற்காக நான் என்ன வேணுனாலும் பண்ண தயார் – தொடர் நாயகன் ஹார்டிக் பாண்டியா

அதைவிட டெஸ்ட், ஒருநால், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் (52* ரன்கள் & 5/28 விக்கெட், 2018) மற்றும் டி20 கிரிக்கெட்டில் (51 ரன்கள் & 4/33 விக்கெட், 2022) அவர் 50+ ரனகளும் 4 விக்கெட்களும் இதே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் பதிவு செய்துள்ளார் என்பது ஆச்சரியமாகும். உலக அளவில் பாகிஸ்தானின் முஹமது ஹஃபீசுக்கு பின்பு இந்த அரிதான சாதனையை செய்யும் 2-வது வீரராக பாண்டியா அசத்தியுள்ளார்.

Advertisement