IND vs ENG : இந்த ஒரு விஷயத்திற்காக நான் என்ன வேணுனாலும் பண்ண தயார் – தொடர் நாயகன் ஹார்டிக் பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடிய இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தினார். அதனை தொடர்ந்து மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த ஹார்டிக் பாண்டியா தற்போது முழுஉடல் தகுதியுடன் இருப்பதால் பேட்டிங் மற்றும் பவுலிங் என தொடர்ந்து அசத்தி வருகிறார். நடைபெற்ற முடிந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடரிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்து தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Hardik Pandya 1

- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பின்னர் இந்த மூன்று போட்டிகளின் அடிப்படையில் தொடர் நாயகனுக்கான விருது ஹார்டிக் பாண்டியாவிற்கு வழங்கப்பட்டது. குறிப்பாக நேற்று முடிவடைந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது பந்துவீச்சில் 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய பாண்டியா பேட்டிங்கிலும் 71 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெருமளவு உதவியாக இருந்தார்.

இந்த தொடர் முழுவதுமே அவரது சிறப்பான பங்களிப்பு காரணமாக அவருக்கு இந்த தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடர் நாயகன் விருதுக்குப் பிறகு ஒருநாள் தொடர் குறித்து பேசிய அவர் கூறுகையில் : வெள்ளை பந்து கிரிக்கெட் என்பது எப்போதுமே எனக்கு பிடித்தமான ஒன்று. நமக்கு எல்லாம் தெரியும் இங்கிலாந்து அணி எவ்வளவு ஒரு பலம் வாய்ந்த அணி என்று. அப்படிப்பட்ட ஒரு அணியை இங்கு வந்து வீழ்த்துவது என்பது சாதாரண ஒரு விடயம் கிடையாது.

Hardik Pandya 2

ஒரு அணியாக எங்களுக்கு இந்த தொடரின் வெற்றி மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் சரியான திட்டத்துடன் செயல்பட்ட நாங்கள் இந்த சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி எங்களின் திறனை நிரூபித்துள்ளோம். பந்துவீச்சில் எனது முக்கிய பணியே ரன்கள் செல்லாமல் கட்டுப்படுத்துவது தான். அப்படி தொடர்ந்து பல டாட் பால்களை வீசும் போது ஒரு கட்டத்தில் நமக்கு விக்கெட்டுகள் பரிசாக கிடைக்கும்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் நான் விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. அதே வேளையில் எனது பந்துவீச்சில் ரன்கள் சென்றாலும் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் எனது ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் சென்றால் கூட ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் அது எனக்கு முழு மகிழ்ச்சி தான். அந்த வகையில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார்.

இதையும் படிங்க : IND vs ENG : நாங்க தப்பு பண்ணிட்டோம். இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு பேசிய – ஜாஸ் பட்லர்

பேட்டிங்கை காட்டிலும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ரிஷப் பண்ட் எவ்வளவு திறமையான வீரர் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் சூழ்நிலையை புரிந்து இந்த இறுதி போட்டியில் அவர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. எங்கள் இருவரது பார்ட்னர்ஷிப் அணிக்கு வெற்றி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மிகவும் மகிழ்ச்சி என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement