கேப்டனா வேற இருக்கீங்க, அப்படி ஆடினால் உங்களுக்கு செட்டாகாது – இளம் வீரருக்கு சேவாக் வைத்த கோரிக்கை

sehwag
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மார்ச் 7-ஆம் தேதியன்று நடந்த 15-வது லீக் போட்டியில் டெல்லியை பதம்பார்த்த லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149/3 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரித்வி ஷா 61 ரன்கள் எடுத்தார். லக்னோ சார்பில் பந்துவீச்சில் அசத்திய ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Prithivi Shaw LSG vs DC

- Advertisement -

அதை தொடர்ந்து 150 என்ற இலக்கை துரத்திய லக்னோ 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் அதிரடியாக 52 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 80 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

மெதுவாக பேட்டிங் செய்த பண்ட்:
முன்னதாக அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சந்தித்த முதல் பந்திலிருந்தே லக்னோவை சரமாரியாக அடித்த பிரிதிவி ஷா பவர்பிளே ஓவர்களில் பட்டைய கிளப்பி 34 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிலும் முதல் விக்கெட்டுக்கு டெல்லி பதிவு செய்த 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் அவர் மட்டும் 61 ரன்கள் குவிக்க மறுபுறம் அதை வேடிக்கை பார்த்த டேவிட் வார்னர் 12 பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோவ்மன் போவல் 3 (10) ரன்களில் நடையை கட்ட 74/3 என டெல்லி திடீரென சரிந்தது.

அந்த சரிவை சரிசெய்ய களமிறங்கிய டெல்லியின் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் விக்கெட்டை விடக்கூடாது என்ற எண்ணத்தில் மெதுவாக பேட்டிங் செய்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த போதிலும் 36 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 39* ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் பிரித்திவி ஷா பவர்பிளே ஓவர்களில் கொடுத்த அதிரடியான தொடக்கத்தை கெடுக்கும் வகையில் அவர் மெதுவாக ஆடியது அந்த அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

- Advertisement -

செட் ஆகாது:
இந்நிலையில் இது போல ரிஷப் பண்ட் மெதுவாக விளையாடுவது அவருக்கும் அவரின் அணிக்கும் செட்டாகாது என்று ஜாம்பவான் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற ஸ்டைலில் அவர் விளையாடுவது பின்னடைவை ஏற்படுத்துகிறது. இங்கே வெற்றி தோல்வி என்பதற்காக அவரின் குணத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது. அவர் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கையை பாருங்கள்.

Sehwag

அந்த பந்துகளில் அவர் நிச்சயம் 60 ரன்களை அடித்திருக்க வேண்டும். அவர் மட்டும் அதிரடியாக பேட்டிங் செய்து 20 ரன்களை சேர்த்து அடித்திருந்தால் லக்னோவுக்கு கண்டிப்பாக தோல்வி கிடைத்திருக்கும். எனவே அவரின் ஸ்டைலை அவர் எப்போதும் மாற்றக்கூடாது. ஏனெனில் எப்போதெல்லாம் அவர் சுதந்திரமாக விளையாடுகிறார் அப்போதெல்லாம் அதிக ரன்கள் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார் என்பதை அனைவரும் அறிவோம்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல பொதுவாகவே அதிரடியாக பேட்டிங் ஸ்டைல கையாளும் ரிஷப் பண்ட் எதிரணிகளை தெறிக்கவிடும் ஒருவராக கருதப்படுகிறார். குறிப்பாக இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும்போது ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதிரணிகளை பிரித்தெடுக்கும் அவர் அதிரடியாக ரன்களை குவித்து இந்தியாவிற்கு பல வெற்றிகளைத் தேடி கொடுத்ததை சமீப காலங்களில் பார்த்துள்ளோம்.

pant

அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியை காட்டும் அவர் டி20 கிரிக்கெட்டிலும் அதே அதிரடியை காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள வீரேந்திர சேவாக் ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்றதற்காக பொறுப்புடன் விளையாட வேண்டும் என நினைத்து தனது இயற்கைக்கு மாறாக மெதுவாக விளையாடுவது ரிஷப் பண்ட்க்கு செட்டாகாது என கூறியுள்ளார்.

- Advertisement -

தாக்குபிடிக்க முடியாது:
“ஒருவேளை கேப்டனாக பொறுப்பேற்று விட்டோம் அதற்காக பொறுப்புடன் மெதுவாக விளையாட வேண்டும் என நினைத்தால் ஐபிஎல் தொடரில் அவரால் வெற்றிகரமாக இருக்க முடியாது. அவர் எப்போதும் பொறுப்புடன் விளையாடி போட்டியை முடிக்கவேண்டும் என்ற குணத்தை கொண்டவர் கிடையாது. இதற்கு முன் எப்படி களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியாக பேட்டிங் செய்து மாட்டினால் சிக்ஸர் இல்லையேல் அவுட் என்று விளையாடினாரோ அதே உத்தியை தொடர வேண்டும்” என இதுபற்றி சேவாக் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பர்ஸ்ட் கியர்ல இருந்து போ. எடுத்ததும் சிக்ஸ்த் கியருக்கு போகாத – இளம்வீரருக்கு டேல் ஸ்டெய்ன் அறிவுரை

கேப்டனாக பொறுப்பேற்று விட்டோம் என்பதற்காக மெதுவாக விளையாடினால் ஐபிஎல் தொடரில் அதுவும் கேப்டனாக தாக்கு பிடிக்க முடியாது என கூறிய சேவாக் எப்போதும் போல அதிரடியாக விளையாடும் பாணியை ரிஷப் பண்ட் கைவிடக் கூடாது என ஆலோசனை வழங்கினார். மேலும் அந்த வகையில் விளையாடியதால் தான் இந்த உச்சத்தை எட்டியுள்ளோம் என்பதை அவர் மறந்து விடக்கூடாது எனவும் கூறினார்.

Advertisement