பர்ஸ்ட் கியர்ல இருந்து போ. எடுத்ததும் சிக்ஸ்த் கியருக்கு போகாத – இளம்வீரருக்கு டேல் ஸ்டெய்ன் அறிவுரை

Kartik Tyagi Dale Styen
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக அனைத்து அணிகளும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கிய இந்த தொடரின் முதல் வாரம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அதில் நடந்த பெரும்பாலான போட்டிகள் கடைசி கட்ட ஓவர்கள் வரை சென்றதால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தன. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டு புள்ளிபட்டியலில் டாப் 4 இடங்களைப் பிடித்து நாக் – அவுட் சுற்றுக்கு செல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போது முதலே ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதற்கேற்றார் போல் இந்த வருட ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே நிறையா ட்விஸ்ட் நடந்து வருகிறது.

மீண்டெழுமா ஹைதெராபாத்:
ஏனெனில் இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளுடன் ஆரம்பத்திலேயே வெற்றி நடை போடத் தொடங்கியுள்ளன. அதிலும் நேற்று முளைத்த காளான்களாக விளங்கும் லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் கூட அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் உள்ளன. ஆனால் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்துள்ள நடப்புச் சாம்பியன் சென்னை, மும்பை போன்ற அணிகள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து ஹாட்ரிக் தோல்விகளுடன் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் புள்ளிப் பட்டியலின் அடிப்பகுதியில் திண்டாடி வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் அதலபாதாளத்தில் திண்டாடி வருகிறது. இதிலிருந்து அந்த அணி மீண்டெழுந்து எப்படி வெற்றி பெறப் போகிறது என்ற கவலை அந்த அணி ரசிகர்களிடம் முதல் போட்டியிலிருந்தே காணப்படுகிறது.

ஜாம்பவான் பயிற்சியாளர்கள்:
அந்த அணியில் இதுவரை நடந்த போட்டிகளில் பேட்டிங் பவுலிங் என எதுவுமே சரியாக அமையவில்லை. இருப்பினும் தோல்விகளில் கற்ற பாடங்களை எடுத்துக் கொண்டு அடுத்த போட்டிகளில் வெற்றிப் பாதைக்கு திரும்ப அந்த அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கேற்றாற்போல் இதர அணிகளை காட்டிலும் அந்த அணியின் பேட்டிங்க்கு வெஸ்ட் இண்டீசின் ஜாம்பவான் பிரைன் லாராவும், சுழல் பந்து வீச்சுக்கு இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனும், வேகப்பந்து வீச்சுக்கு தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் என உலகத் தரம் வாய்ந்த ஜாம்பவான் பயிற்சியாளர்கள் அந்த அணி வீரர்களை தயார்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இளம் இந்திய வீரர் கார்த்திக் தியாகிக்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜாம்பவான் டேல் ஸ்டைன் பயிற்சி அளிக்கும் விதம் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி ஹைதராபாத் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கார்த்திக் தியாகியிடம் டேல் ஸ்டெயின் பேசியது பின்வருமாறு. “சாதாரணமாக இரு. ஃபெராரி காரை போல இருக்கும் நீ முதல் கியரில் இருந்து தொடங்க வேண்டும். நேரடியாக 6-வது கியருக்கு செல்லக் கூடாது. நான் உன்னை மெதுவாக உறுதியாக 6-வது கியரில் பார்க்க விரும்புகிறேன்” என தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார்.

கலக்கல் கார்த்திக் தியாகி:
அவர் கூறுவது போல தற்போது 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள இளம் இந்திய வீரர் கார்த்திக் தியாகி ஒரு ஃபெராரி காரை போன்ற வேகத்தை கொண்டவர் என்று கூறலாம். ஏனெனில் கடந்த 2020 ஐசிசி அண்டர்-19 உலககோப்பை இந்திய அணியில் 11 விக்கெட்கள் எடுத்து அசத்திய அவர் அந்த வருடமே 1.3 கோடி என்ற நல்ல தொகைக்கு ராஜஸ்தானுக்கு விளையாடினார். அந்த வருடம் 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை எடுத்த அவர் 2021இல் காயம் காரணமாக 4 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

- Advertisement -

இருப்பினும் அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது 2 விக்கெட்டுகள் எடுத்த அவர் 1 ரன் மட்டுமே கொடுத்து ராஜஸ்தானுக்கு தனி ஒருவனாக வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அந்த நிலையில் தற்போது ஹைதராபாத் அணிக்காக 4 கோடிக்கு விளையாடும் அவர் நடராஜன், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் இருப்பதால் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : ஒன்னுமே செய்யாமல் சும்மா சுற்றும் அவருக்கு வாய்ப்பு போதும்! தமிழக வீரரை விளாசிய ஆகாஷ் சோப்ரா

எனவே வரும் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அவர் தற்போது தமக்கு மிகவும் பிடித்த ரோல்மாடலாக விளங்கும் ஜாம்பவான் டேல் ஸ்டெய்னிடம் பயிற்சி எடுத்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement