ஒன்னுமே செய்யாமல் சும்மா சுற்றும் அவருக்கு வாய்ப்பு போதும்! தமிழக வீரரை விளாசிய ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து நிறைய பரபரப்பான த்ரில்லர் நிறைந்த போட்டிகளை அரங்கேற்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தற்போது கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று போட்டிகள் வரும் மே 22-ஆம் தேதி முடிவடையும் நிலையில் அதற்குள் அபாரமாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் முழுமூச்சுடன் மோதி வருகின்றன. இந்த தொடரில் வெற்றிகரமான அணிகளாக இருக்கும் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் மும்பை போன்ற அணிகள் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் ஹாட்ரிக் தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் அதல பாதாளத்தில் தள்ளாடி வருகிறது.

இருப்பினும் பஞ்சாப், பெங்களூரு போன்ற இதுவரை ஒரு கோப்பைகளை கூட வெல்லாத அணிகள் அற்புதமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளுடன் ஆரம்பத்திலேயே வெற்றி நடைபோட்டு வருகின்றன. அதிலும் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் கூட தங்களது முதல் சீசனிலையே அற்புதமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது.

- Advertisement -

கலக்கும் குஜராத் டைட்டன்ஸ்:
அந்த வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் இதற்கு முன் ஒருமுறை கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் தடுமாறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று அசத்தியது. அதிலும் இந்த வருடம் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 15 போட்டிகளில் ஒருமுறைகூட தோற்காத அணியாக அந்த அணி வலம் வருகிறது.

அந்த அணியின் பேட்டிங்கைவிட முகமது சமி, லாக்கி ஃபர்குசன், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் என தரமான வீரர்கள் நிறைந்திருப்பதால் பந்துவீச்சு பலமாக உள்ளது. இருப்பினும் பேட்டிங்கில் இளம் இந்திய வீரர் சுப்மன் கில் தவிர வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்காதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

சும்மா சுற்றும் விஜய் சங்கர்:
அதிலும் அந்த அணிக்காக 3-வது இடத்தில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இதுவரை பெரிய அளவில் எதுவும் ரன்கள் அடிக்காதது அந்த அணியின் பேட்டிங்கை பலவீனமாக தோற்றமடைய வைத்துள்ளது. இது பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இன்றைய போட்டியில் 3-வது இடத்தில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அது தான் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் ஒரு ஆல்ரவுண்டராக இருக்கும் அவர் பந்து வீச்சில் விக்கெட்டுகளையும் எடுப்பதில்லை பேட்டிங்கிலும் அதுவும் 3-வது இடம் போன்ற முக்கியமான இடத்தில் களமிறங்கி ரன்களும் குவிப்பதில்லை. எனவே குஜராத் அணி அவரை தாண்டி இதர வீரர்களை பார்க்கவேண்டியுள்ளது” என கூறினார்.

அவர் கூறுவது போல 3-வது இடம் என்பது ஒரு அணியின் பேட்டிங்கில் மிக முக்கியமான இடமாகும். அந்த வகையில் இந்தத் தொடரில் இதுவரை 2 போட்டிகளில் 3-வது இடத்தில் களமிறங்கிய விஜய் சங்கர் முதல் போட்டியில் 6 பந்துகளை சந்தித்து வெறும் 4 ரன்களும் 2-வது போட்டியில் 20 பந்துகளை சந்தித்து வெறும் 13 ரன்களும் எடுத்து டெஸ்ட் போட்டியை போல விளையாடி வருகிறார். அதைவிட அந்த 2 போட்டிகளிலும் சொல்லி வைத்தார் போல் அவர் கிளீன் போல்ட்டானது நிறைய ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்றியது.

- Advertisement -

அதைவிட முதல் போட்டியில் பந்து வீசாத அவர் 2-வது போட்டியில் வெறும் ஒரு ஓவர் வீசிய நிலையில் அதில் 14 ரன்களை வாரி வழங்கினார். இதற்கு முந்தைய ஐபிஎல் தொடரில் நடுவரிசையில் விளையாடிய அவரை இந்த வருடம் 1.4 கோடி என்ற தொகைக்கு வாங்கிய குஜராத் நேரிடையாக விளையாடும் வாய்ப்பையும் கொடுத்தது. ஆனால் அதில் சொதப்பி வரும் அவருக்கு ஏப்ரல் 8-ஆம் தேதியான இன்று நடைபெறும் பஞ்சாப்க்கு எதிரான போட்டிக்குப் பின் வாய்ப்பளிக்க கூடாது என்று குஜராத் நிர்வாகத்தை ஆகாஷ் சோப்ரா கேட்டுக்கொண்டுள்ளார். அதே போல இன்றைய போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்ட அவருக்கு பதில் மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் ஐதராபாத் அணியில் விளையாடிய அவர் இதுவரை 49 ஐபிஎல் போட்டிகளில் வெறும் 729 ரன்களை 25.14 என்ற சுமாரான சராசரியில் 123.56 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார். அதேபோல் 21 இன்னிங்ஸ்களில் பந்துவீசிய அவர் வெறும் 9 விக்கெட்டுகளை மட்டுமே 8.76 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : கழுத்தை பிடித்து வெளியே தள்ளிட்டாங்க! மும்பையில் நடந்த அவமானத்தை பகிரும் லேட்டஸ்ட் சிஎஸ்கே வீரர்

என்னதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு ஆல்ரவுண்டராக இருக்கும் அவர் இப்படி சுமாராக செயல்பட்டால் நிச்சயம் தொடர்ந்து ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை.

Advertisement