கழுத்தை பிடித்து வெளியே தள்ளிட்டாங்க! மும்பையில் நடந்த அவமானத்தை பகிரும் லேட்டஸ்ட் சிஎஸ்கே வீரர்

CSK
- Advertisement -

மும்பை நகரில் மிகுந்த பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தது. இந்த வருடம் அந்த அணிக்கு பேட்டிங் சொதப்பலாக இருந்து வரும் நிலையில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் முன்னாள் கேப்டன்எம்எஸ் தோனி கடந்த 2 வருடங்களுக்கு பின் முதல் முறையாக அரைசதம் அடித்து பார்ம்க்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு ஆறுதலாகவும் பலமாகவும் மாறியுள்ளது.

- Advertisement -

லேட்டஸ்ட் ராபின் உத்தப்பா:
அவருடன் இளம் வீரர் ஷிவம் துபேவை தவிர அனுபவ வீரர் ராபின் உத்தப்பா மட்டும்தான் அந்த அணியின் பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பெரும்பாலான வருடங்கள் விளையாடி தனக்கென ஒரு பெயரெடுத்த அவர் கடந்த வருடம் முதல் முறையாக சென்னை அணியால் வாங்கப்பட்டார். அதன்பின் லீக் சுற்றில் பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்து வந்த அவருக்கு சுரேஷ் ரெய்னா காயம் அடைந்ததால் சென்னை அணிக்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் பிளே ஆஃப் சுற்றில் முதல் முறையாக வாய்ப்பைப் பெற்ற அவர் பைனல் உட்பட முக்கியமான போட்டிகளில் அதிரடியாக முக்கியமான ரன்களை குவித்து சென்னை 4-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் 36 வயதை கடந்த போதிலும் இந்த வருடம் அவரை மீண்டும் 2 கோடிக்கு சென்னை நிர்வாகம் வாங்கியது. அந்த வகையில் இந்த வருடம் முதல் போட்டியில் 28 (21) ரன்களை எடுத்த அவர் 2-வது போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக 50 (27) ரன்களை எடுக்க 3-வது போட்டியிலும் 13 (10) ரன்களை எடுத்து இதுவரை பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்றாலும் சென்னையின் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

Uthappa-2

வெளியே தள்ளிய மும்பை:
கடந்த 2008 முதல் இதுவரை 6 அணிகளுக்காக விளையாடியுள்ள அவர் 4800 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். பெங்களூரு, கொல்கத்தா போன்ற அணிகளில் நிறைய வருடங்கள் விளையாடிய அவர் தனது ஐபிஎல் பயணத்தை முதல் முறையாக தற்போது 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடங்கினார். ஆனால் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக மும்பைக்கு விளையாடியபோது பெரிய அளவில் ஜொலிக்க தவறிய காரணத்தால் அந்த அணி வலுக்கட்டாயமாக தன்னை வெளியேற்றியதாக ராபின் உத்தப்பா வேதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த நேரத்தில் நான் ஜாகிர் கான் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோருடன் இருந்தேன். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக வேறு அணிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒருசில வீரர்களில் நானும் ஒருவன். அந்தத் தருணம் எனக்கு மிகவும் வேதனையை கொடுத்தது ஏனெனில் அந்த சமயத்தில் மும்பை அணி மீது எனக்கு மிகப்பெரிய விஸ்வாசம் இருந்தது. அதிலும் ஐபிஎல் தொடர் துவங்க ஒரு மாதம் முன்பாக அவர்கள் என்னை வேறு அணிக்கு மாற்ற முயற்சித்த போது அதற்கான ஆவணங்களில் நான் கையெழுத்திட மறுத்தேன்”

Robin Uthappa MI 2008

“அதன் காரணமாகவும் எனது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த ஒருசில மோசமான சம்பவங்கள் காரணமாகவும் அதன்பின் பெங்களூருவுக்காக நான் விளையாடிய முதல் வருடத்தில் ஒரு போட்டியில் கூட சிறப்பாக செயல்படவில்லை. அந்த வருடத்தில் என்னை நீக்கி விட்டு மீண்டும் அணிக்குள் சேர்த்த ஒரு போட்டியில் மட்டும்தான் சிறப்பாக செயல்பட்டேன். மேலும் என்னை மாற்றுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என்றால் மும்பை அணிக்கான 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காது என்று மும்பை அணி நிர்வாகத்திலிருந்து ஒருவர் என்னிடம் கூறினார். அவரின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை” என கூறினார்.

- Advertisement -

அதாவது தன்னை முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் வாங்கிய மும்பை மீது மிகுந்த விஸ்வாசம் வைத்திருந்ததாக கூறும் ராபின் உத்தப்பா அதன் காரணமாக அந்த அணிக்கு தொடர்ந்து விளையாட விரும்பியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் முதல் வருடத்தில் பெரிய அளவில் சோபிக்க தவறிய காரணத்தால் 2-வது வருட ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு வெறும் ஒரு மாதம் முன்பாக திடீரென்று தன்னை வேறொரு அணிக்கு மும்பை அணி நிர்வாகம் மாற்ற முயன்றதாக கூறும் ராபின் உத்தப்பா அதற்கு தாம் மனதளவில் தயாராக இல்லாததால் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார்.

uthappa 1

ஆனால் கையெழுத்துப் போடவில்லை என்றால் மும்பைக்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் தான் அமர்ந்திருக்க வேண்டும் என்பது போல் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தன்னை மிரட்டும் வகையில் பேசி ஆவணத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் ராபின் உத்தப்பா வேதனை தெரிவித்துள்ளார். அதாவது இன்று விஸ்வாசத்திற்கு பெயர் போன அணியாகக் கருதப்படும் மும்பை முதல் வருடத்தில் தன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக ராபின் உத்தப்பா கூறியுள்ளது பல ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க : CSK vs SRH : முதல் வெற்றி யாருக்கு? ஜெயிக்கப்போவது யாரு? – முன்னோட்டம், புள்ளிவிவரம், பிட்ச் ரிப்போர்ட் இதோ

கடந்த 2008இல் முதல் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக விளையாடிய அவர் 14 போட்டிகளில் 320 ரன்கள் குவித்தார். இருப்பினும் அவரை வலுக்கட்டாயமாக நீக்கியதால் மனதளவில் சோர்ந்த ராபின் உத்தப்பா பெங்களூருவுக்காக 2009இல் விளையாடியபோது அதைவிட மோசமாக செயல்பட்டு 13 இன்னிங்ஸ்களில் 175 ரன்களை மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement