சுயமரியாதை இருந்தா இதை செய்ங்க.. தோனியை போல ராகுலை அவமானப்படுத்திய லக்னோ ஓனர்.. ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 8ஆம் தேதி நடைபெற்ற 57வது லீக் போட்டியில் லக்னோவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 166 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஆயுஸ் பதோனி 55*, நிக்கோலஸ் பூரான் 48* ரன்கள் எடுத்தனர்.

அதை சேசிங் செய்த ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா 75*, டிராவிஸ் ஹெட் 89* ரன்கள் அடித்து 9.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 7வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் சென்னையை முந்தி 3வது முன்னேறியது. மறுபுறம் படுதோல்வியை சந்தித்த லக்னோ 6வது இடத்திற்கு சரிந்தது.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ மிகவும் திணறலாக விளையாடி 165/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் மெதுவாக விளையாடி 29 (33) ரன்கள் மட்டுமே எடுத்தார். அதே போல டீ காக் 2 (5), ஸ்டோய்னிஸ் 3 (5) ரன்களில் அவுட்டானதால் லக்னோ பின்னடைவை சந்தித்தது. மொத்தத்தில் லக்னோ அணியின் பேட்டிங்கை பார்த்த அனைவரும் பிட்ச் ஸ்லோவாக இருப்பதாக நினைத்தனர்.

ஆனால் அதே ரன்களை வெறும் 9.4 ஓவரில் சேசிங் செய்த ஹைதராபாத் அதெல்லாம் ஒன்றுமில்லை பிட்ச் தார் ரோட் போல இருக்கிறது என்பதை காண்பித்தது. அந்த சூழ்நிலையில் போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை சந்தித்த உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா மிகுந்த கோபத்துடன் திட்டுவது போல் பேசினார். குறிப்பாக “ஹைதராபாத் இப்படி அடித்த பிட்ச்சில் நீங்கள் அப்படி மெதுவாக விளையாடியது ஏன்?” என்ற வகையில் அவர் பேசினார்.

- Advertisement -

16 கோடிகளை சம்பளமாக கொடுக்கும் அணியின் உரிமையாளர் தோல்விக்காக இப்படி பேசுவதில் தவறில்லை. ஆனால் மைதானத்திலும் தொலைக்காட்சியின் நேரலையிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது பொதுவெளியில் தங்கள் அணியின் கேப்டனை அவர் இப்படி பேசியது சரியான அணுகுமுறையல்ல என்றே சொல்லலாம். சொல்லப்போனால் 2016 சீசனில் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தோனி தலைமையில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதையும் படிங்க: ஹைதராபாத் அணியின் நிர்வாகம் அப்படி செய்ஞ்சத என்னால தாங்கிக்க முடியல – டேவிட் வார்னர் வருத்தம்

அதனால் அடுத்த வருடமே உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்று பார்க்காத புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்து தோனியை அவமானப்படுத்தினார். தற்போது அதே போல ராகுலை அவர் அவமானப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் வலைதளங்களில் பேசுகின்றனர். எனவே வெற்றி – தோல்வி என்பது விளையாட்டின் அங்கம் என்பதை புரிந்து கொள்ளாமல் பொதுவெளியில் அவமானப்படுத்திய லக்னோ அணியிலிருந்து சுயமரியாத இருந்தால் அடுத்த வருடம் வெளியேறுங்கள் என்று கேஎல் ராகுலுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement